பிப்ரவரி 19, 2014

குறளின் குரல் - 671

19th Feb 2014

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.
                        (குறள் 665: வினைத்திட்பம் அதிகாரம்)

வீறெய்தி - வீறு எய்தி - சிறப்பு அடைந்து
மாண்டார் - மாட்சிமை பொருந்தியவர்கள் (அமைச்சர்கள்)
வினைத்திட்பம் - அவர்கள் செயலாற்றும் உறுதியானது
வேந்தன்கண் - ஓர் அரசனிடம் (அல்லது அரசிடம்)
ஊறு எய்தி -  அவனுக்குரிய, அவன் ஆட்சிக்குரிய பயனாக, செல்வம், புகழாக கசிந்து
உள்ளப்படும் - எல்லோராலும் மதிக்கப்படும்

சிறப்படைந்த, மாட்சிமை பொருந்திய அமைச்சர்கள் வினையாற்றலில் உள்ள உறுதியானது, வலிமையானது, அரசுக்கு, ஆட்சிக்குரிய பயனாகச் சென்றடைந்து, அத்திண்மையானது எல்லோராலும் மதிக்கப்படும் என்பதே இக்குறளின் கருத்து..

இக்குறளின் அமைப்பில், பாதி குறள் வீணாக்கப்பட்டு விட்டது போல் தோன்றுகிறது. சிறப்பு அடைந்த, மாட்சிமை பொருந்தியவர் என்ற சிறப்பு அடைமொழிகளால் அமைச்சர்களை அழைத்த பிறகு அவர்களின் வினைத் திட்பம் என்பது புரிந்துகொள்ளப்படும் ஒன்றுதானே. இக்குறள் வினைதிட்பத்தைப் பற்றியா, அல்லது அவ்வினைத் திட்பத்தில் ஒழுகும் அமைச்சர்களைப் பற்றியா என்பதில் தெளிவில்லை. தம் வினைத்திட்பத்தினால் அரசுக்குரிய பயன்களை, செல்வங்களைப் பெற்றுத்தரும் அமைச்சர்கள் சிறப்படைந்த மாட்சிமை பெறுவார்கள் என்றிருந்தால், அது நிருவாகத்தில் இருப்பவர்களுக்கு ஊக்கியாக இருந்திருக்குமே!
ஊறு என்ற சொல், கசிந்து என்ற பொருளாகி, பயன் என்பது மெதுவாக வந்துறும் என்பதைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். இக்குறள் சொல்லும் கருத்தை இவ்வாறு கொள்ளுதலே பொருந்தும். சிறப்படைந்த, மாட்சிமைப் பொருந்திய அமைச்சரது வினைத்திட்பமாயினும் அதன் பயன் மெதுவாக உறி, கசிந்துதான் எல்லோரையும் அடையும்; அப்பயனாலேயே எல்லோராலும் நினைக்கப்படும்.

Transliteration:

vIReidi mANDAr vinaiththiTpam vENdankaN
Ureidi uLLap paDum

vIReidhivIRu eidhi – renowned
mANDAr – great and glorious ministers
vinaiththiTpam – their strength is executing the undertaken
vENdankaN – will reach as fame and fortune for the rule/ruler
UreidiUru eidhi – percolating through in time to reach everyone
uLLappaDum – and will be thought with gratitiude by everyone.

The resolute strength in executing the undertakings by renowned and great ministers will reap the fruits of the undertaking to the rule and the ruler and will be gratefully praised by everyone in time.

While reading this verse, it feels half the verse has been wasted. By using the adjectives such as glorious and renowned do not add any verse enhancing value to the intent of this verse. Once such adjectives are used, their ability to get things done is also understood one. It is not clear if this verse is about the required strength, and resolve in executing the undertaking or about the glory of the ministers.  If the verse had atleast said it in a tone that ministers that show resolve to finish the undertakings to get larger benefit for the rule and the rules are great and will be celebrated as renowned ministers, the flow would have been natural.

The word “Uru” in the second line must be construed as the benefits percolating or oozing in osmotically.  May be we should interpret the verse as follows: Though done with strength and resolve, by the renowed and glorious ministers, the benefits of the such undertaking will percolate in time to the rule and ruler and will be remembered and praised by one and all.

“The resolve and strength shown in undertakings by the renowned
 and great ministers will percolate to rule and all to be rememberd”


இன்றெனது குறள்:

சிறப்புடன் மாண்புளோர் தம்வினைத் திண்மை
திறமரசின் நன்மதிப்பெய் தும்

(பிரித்து படிக்க: சிறப்புடன் மாண்புளோர்தம் வினைத் திண்மைத் திறம் அரசின் நன்மதிப்பு எய்தும்)

siRappuDan mANbuLOr thamvinaith thiNmai
thiRamarasin nanmadippei dum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...