18th Feb 2014
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
(குறள் 664: வினைத்திட்பம் அதிகாரம்)
சொல்லுதல் - இதைச்
செய்வேன், அதைச்செய்வேன் என்னும் சூரத்தனமான பேச்சு
யார்க்கும் - எல்லோருக்குமே
எளிய - எளிதாகும்
அரியவாம் - கடினமாம்
சொல்லிய வண்ணம் - அவ்வாறு
சூரத்தனமாக பேசியது போல்
செயல் - செயல்
ஆற்றல்
வெகுவாக மேற்கோளாக, எடுத்துக்காட்டாக கட்டுரைகள்,
மேடைப் பேச்சுகளில் முழங்கும் குறளிது. என்னால் இச்செயலை இவ்விதமாய் செய்துமுடிக்க
இயலும் என்னும் சூரத்தனமான பேச்சு எல்லாருக்குமே எளிது. ஆனால் வினையை செய்து முடிக்கும்
உறுதியோடும், ஆற்றலோடும் செயலாற்றுதல் யாவர்க்கும் கடினமே. பொதுவாகச் சொல்லுவது போன்று
தோன்றினாலும், வினையாற்ற உறுதி அதாவது திட்பம் வேண்டும் என்று உள்ளுறையாகச் சொல்லப்படுகிறது
கம்பர் இராமயணத்தின் அரசியல் படலத்தில் இவ்வாறு
கூறுகிறார்: “உரைசெயற் கெளிதுமாகி அரிதுமாம்
ஒழுக்கில்”. புறநானூற்றுப் பாடலொன்றில், பாண்டியன் கீரஞ்சாத்தன் என்னும் குறுநில
மன்னனின் வீரத்தைப் போற்றும் ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர், “எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின் கள்ளுடைக் உள்ளூர்க்
கூறிய நெடுமொழி மறந்த சிறுபேராளர்” என்பார். வேலும் வாளும் வீசி விளையாடும் போர்களத்தில்
ஊருக்குள் இருந்தபடி, மது உண்ட மயக்கத்தில் வீரம் பேசித் திரிந்தவர்கள், போர் வந்து
விட்டபோது, பகைவரை எதிர்கொள்ள முடியாது பயந்து ஓட நினப்பவர்கள் என்று சிலரை இழந்து
சொல்லுகிறார், இக்குறளின் கருத்தையொட்டி. (வெருவரு
ஞாட்பின் - அச்சம்தரு போர்களத்தில்)
Transliteration:
Solludal yArkkum eLiya
ariyavAm
Solliya vaNNam seyal
Solludal – to
waste words about their ability to do things
yArkkum – for
everyone
eLiya – It
is easy
ariyavAm – But
it is difficult to
Solliya vaNNam – act
as spoken
Seyal – to
do for most of that lacking in strength.
Another
popular verse that is used by most literatis in their articles and speeches. To
speak that I can do this and that in vein is easy for anyone. But, to execute
those with the strength and resolve is rather difficult.
In
Kambaramayana, in the section on polity, Kambar says thus: “to say is easy, but
difficult to practice” through the lines (uraiseyaR
keLidumAgi aridumAm ozhukkil). To quote from sangam anthology, in
“PuranAnURu”, a poet, AvUr mULangizhAr talks about a few cowardly soldiers who
were boastful about what they would do in the war field and when the time of
war, ran away fearing enemies in the battle field, a thought same as what
VaLLuvar expresses in the verse.
“To be vainful claimant of
what they can do is easy for anyone
To deliver as they claim is difficult without
strength for everyone”
இன்றெனது
குறள்(கள்):
வினைத்திட்பத் தோடாற்றல் யார்க்கும் கடினம்
நினையாமல் பேசல் எளிது
(வினைதிட்பத்தோடு ஆற்றல்)
vinaitthiTpath
thODARRal yArkkum kaDinam
ninaiyAmal
pEsal eLidu
இன்னும் விளங்கச் சொல்வதென்றால், இவ்வாறும் சொல்லலாம்.
செயலுறுதி யோடாற்றல் யார்க்கும் கடினம்
முயலாது பேசல் எளிது
seyaluRudi yODARRal yArkkum kaDinam
muyalAdu pEsal eLidu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam