பிப்ரவரி 17, 2014

குறளின் குரல் - 669

17th Feb 2014

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.
                        (குறள் 663: வினைத்திட்பம் அதிகாரம்)

கடைக் - நிறைவுற்ற பிறகு
கொட்கச் - வெளிப்படச் செய்வதே
செய்தக்க(து) - செய்யும் செயலுக்குண்டாய
ஆண்மை - திண்மையாம்
இடைக் - இடையிலேயே
கொட்கின் - செய்கை என்னவென்று வெளிப்பட்டால்
எற்றா விழுமந் - முடிவில்லாத துன்பமே
தரும் - கொண்டு தரும்

ஒரு செயல் நிறைவுற்ற பிறகே அதைப்பற்றி வெளிப்படச் செய்யவேண்டும். அவ்வாறு செய்தலே அச்செயல் நிறைவுறுதலுக்கான வலிமையைத் தரும். அதுவே வினைத் திட்பம் எனப்படுவதுமாம். இடையிலேயே எடுத்துக்கொண்ட செயலைப் பற்றியச் செய்திகளை வெளியிடுவதோ, கசிய விடுவதோ, முடிவில்லாத தடைகளையும், செயல் நிறைவுறா நிலையையும் தந்துவிடும். இது அரசின் செயல்களை நிருவகிக்கும் அமைச்சர்களுக்குத் தேவையான திறனாம்.

ஒரு அரசு மேற்கொள்ளும் செயல்களுக்கு எத்துணையோ இடையூறுகள் பகை நிலையில் உள்ளவர்களால் வரலாம். இந்நிலையில் பிறர் அறியாவண்ணம், இரகசிங்களைப் போற்றிக் காப்பாற்றாவிட்டால், அதனால் பல தடைகளும், தடைகளால் கெடுவதும் செயலுக்கு வந்து சேரலாம்.

இன்றும் ஆட்சிகளிலோ, பெரும் வணிக நிறுவனங்களிலோ, உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் இத்தகைய இரகசியத்தன்மை காப்பாற்றப்படுவதையும், அவ்வாறு காப்பாற்றாப் படாவிட்டால் அவை பகை அரசுகளுக்கோ, அல்லது நிறுவனங்களுக்கோ சாதகமாக, அவர்கள் வினைகெட ஆற்றும் செயல்களுக்கு உந்துதலாகவும் அமைந்துவிடுவதைப் பார்க்கிறோம்.

Transliteration:

kaDaikoTkach seithakka dANmai iDaikOTkin
ERRA vizhumand tarum

kaDai – After the completion only
koTkach – for the world to know
seithakka(du) – bring out what the finished work is,
ANmai – is the inherent strength to the undertaken work
iDai – if in the middle or during the course
kOTkin – if the details come out
ERRA vizhumand – endless misery or obstacles
Tarum – it will bring (the fact it is let known to others before completion)

Only when a work is competed its nature and outcome should be revealed. Only such resolve will give the strength to the undertaken for it to complete successfully with the intended results. Revelaling in the middle or intermittently will only spoil the progress of the work with obstacles from unknown corners or known enemies and will render the task uncompleted.

There are many obstacles and counter acts from the enemies of the tasks of the state. Unless a minister is able to keep the absolute secrecy, then he will subject the task to be under risk of incompletion or miserable failure.

This we see, even in today’s state operations of many nations as well as corporate houses. Failing to keep the secrecy of plans and tasks will only pave way for others to hinder and help their objectives – which is to ruin the work of the state or the corporate.

“Until success accomplished, not revelaing anything is strength
 Even if it’s minimally revealed will ruin, to make success a myth”


இன்றெனது குறள்:

நிறைந்துவெளிக் காட்டுதல் செய்திட்பம் இன்றேல்
நிறைவுறாத் துன்பாய்த் தடை

niRainduveLik kATTudal seitiTpam inREl
niRavuRath thubAith thaDai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...