16th Feb 2014
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
(குறள் 662: வினைத்திட்பம் அதிகாரம்)
ஊறொரால் (ஊறு ஒரால்)
- எவ்வித தடைகளையும் நீங்குதல்
உற்றபின் - அவ்வாற்று இடையூறு வந்தபோது
ஒல்காமை - அதைக் கண்டு தளரா உறுதியுடைத்தல்
இவ்விரண்டின் - இவ்விரண்டின்
ஆறென்பர் - வழியாயது
(உள்ளது வினைத் திண்மை என்பது உள்ளுறைப் பொருள்)
ஆய்ந்தவர் - நீதி
நூல்களைக் கற்றறிந்த பெரியோர் (அமைச்சர்)
கோள் - இவர்களது
கோட்பாடு, கொள்கை
இக்குறள் வாயிலாக வினைத் திட்பத்துக்கான வழியிரண்டைச் சொல்லுகிறார் வள்ளுவர்.
அவை யாவை? எவ்வித தடைகள் வந்தாலும் அவற்றை நீங்கும் படியாகப் பணியாற்றல். அவ்வாறு வருமாயின்,
அத்தடைகளைக் கண்டு சோர்வடையாமை ஆகிய இரண்டுமே அவையாம். இதுவே நீதி நூல்களைக் கற்றறிந்த
சான்றோர்களின் (அமைச்சர்களின்) வழியாம்! எதற்கு வினைத்திட்பம் என்று சொல்லப்படும்,
செயலாற்றலில் உறுதிக்கு,
Transliteration:
UrorAl uRRapin olgAmai
ivviraNDin
Arenbar Aywthavar kOL
UrorAl – be
removed from all the obstacles
uRRapin – if they
anyway happened (obstacles)
olgAmai – not
being fretted, vexed losing the resolve
ivviraNDin – in
these two
Arenbar – is the
way, to achieve firmness to finish undertaken tasks,say
Aynthavar – the
scholarly
kOL – as
their philosophy or tenet
Through this verse
vaLLuvar gives two ways to the purpose of this chapter, being strong anf firm
in the undertaken tasks. What are these two ways? Work with the ability to remove
any obstacles on the way is the first and foremost; even if such obstacles
come, not being fretted losing the resolve to complete is the second and
equally important. This is the tenet of the learned to stay firm in
accomplishing what they set out to do.
“Remove
obstacles on the way, be firm and resolved
Are
the two ways practiced as their tenet by learned”
இன்றெனது குறள்:
இடையூறு நீங்குதல் சோர்விலாமை உற்றால்
அடைவழியே திட்பத்துக் காறு
idaiyURu
nIngudal sOrvilAmai uRRAl
aDaivaziyE
thiTpaththuk kARu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam