66: (Strength of mind to do work
- வினைத் திட்பம்)
[In the path of honesty are many hurdles. So,
a person with purity set in his mind to do his acts will invariably face a lot
of difficulties to getting his work done. In such situations, a resolute
minister, regardless of consequences will stay firm in his resolve not to
indulge devious ways to accomplish hiw work. This is the primary reason why
this chapter is placed following the purity in work. Honesty or not, still the
firmness to do undertaken is also a required quality of a minister, some would
say ]
15th Feb 2014
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
(குறள் 661: வினைத்திட்பம் அதிகாரம்)
வினைத் திட்பம் என்பது - செய்யும்
செயலில் உறுதி உடைமையென்பது
ஒருவன் - அமைச்சருக்கு
மனத்திட்பம் - உள்ளத்தில்
கொள்ளும் மனத்திண்மையாம், உள்ளத்துறுதியாம்
மற்றைய எல்லாம் - உறுதி
என்று கொள்ளும் நட்பு, படை, சூழ்ந்த வலிமையான அரணெல்லாம்
பிற - திண்மை
எனப்படமாட்டாது
ஒரு அமைச்சருக்கு உள்ளத்துணிவும்,
உறுதியுமே அவர் செய்கின்ற செயல்களுக்கு உறுதியாவது. உறுதியென்று பொதுவாக நினைக்கப்படும்
நட்பு, படை, சூழ்ந்த வலிமையான அரண் என்பவை கூட அவருடைய பணிகளுக்குத் தேவைப்படும் உறுதியாக
இருக்காது என்று சொல்லி உள்ளத்தின் உறுதியென்பதே செய்யும் செயலுக்கு உறுதியாக இருப்பதை,
இக்குறளில் வள்ளுவர் ஆணித்தரமாகச் சொல்லுகிறார்.
Transliteration:
vinaiththiTpam enbadu oruvan manaththiTpam
maRRaiya ellAm piRa
vinaith thiTpam enbadu – the firmness and resolve in work
oruvan – for a minister
manaththiTpam – is being resolute and firm in his heart,
mind
maRRaiya ellAm – others which are symbols of resolve,
friends, army and fortress
piRa – are not true indicators of firmness.
A minister’s
firmness in mind and heart are the prime requisite for the work that he does.
What generally depicted as firmness and assuring the work to get done, such as
friendship, army and a strong fortress do not truly guarantee such strength.
Resolute and firm mind is the prime guarantee to get work done is what is
conveyed in this verse.
“Firmness is in the strength of mind and
heart
For any
work, others façade strength are not”
இன்றெனது குறள்:
திண்மை வினைக்கு படைநட்பு சூழரணில்
திண்ணுளம் கொள்வ தது
thiNmai
vinaikku paDainaTu sUzharaNil
thiNNuLam
koLva dadu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam