பிப்ரவரி 14, 2014

குறளின் குரல் - 666

14th Feb 2014

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.
                        (குறள் 660: வினைத்தூய்மை அதிகாரம்)

சலத்தால் - பொய்ப்புரட்டால், வஞ்சனையால், தீயவினைகளால்
பொருள் செய்து - பொருளை ஈட்டி (யார்? அமைச்சர் என்பது உள்ளுறை)
ஏம் ஆர்த்தல் - அதனால் களிப்பு ஊட்டுதல் (யாருக்கு - ஆள்வோர்க்கு)
பசுமண் கலத்துள் - பச்சை மண்ணால் செய்த மண்பாண்டத்தில்
நீர் பெய்து - நீரை ஊற்றி
இரீ இயற்று - வைத்தார் போன்றதே (இரண்டுமே நிலைகாது, தங்காது)

அமைச்சராக இருக்கின்றவர் வஞ்சத் தீவினைகளால், பொய்ப்புரட்டால், பொருளை ஈட்டி ஆள்வோரை இன்பக் களிப்புறச் செய்தலென்பது, பச்சைமண் கொண்டு செய்த பாண்டத்தில் நீரை ஊற்றிவைத்து சேமிக்க முயல்வதைப் போன்றதாம். இரண்டு நிலைக்காது, தீவினைகளால் வருகிற ஆக்கம் நில்லாது ஓடிவிடும் என்பதால், அவ்வாக்கத்தால் வரும் களிப்பும் நிலையில்லாது போய்விடும்.
சுட்டமண் கலயமே நீரை சேகரிக்கவல்லது என்பது சுட்டும் பொருளாக இருந்து, சுடுவது, நேர்மையான வழியிலே உழைப்பதையும், கடினப் பாதையை உணர்த்துவதையும் குறிப்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்

நற்றிணைப் பாடலொன்று இந்த பசுமண் கொண்டு செய்த கலத்தை உவமையாக்கிக் கூறுகிறது அழகாக. ஒரு தலைவன் பொருள் ஈட்ட வேண்டி தலைவியை விட்டுச் செல்லுகையில், இருவருக்கும் இடையிலான் நெகிழ்வை விவரிக்கையில்,  ஈர்மண் செய்கை நீர்படு பசுங்கலம் பெருமழைப் பெயற்கேற் றாங்கெம்” என்கிறது. அதாவது, தலைவனின் நெஞ்சமானது, தலைவியோடு ஒன்றுபட்டு, ஈரமண்ணால் செய்யப்பட்டு ஈரம் காயாத பசுமட்கலம் ஒன்று பெரிய மழை நீரை ஏந்தவைத்தலால், அது அந் நீரொடு வேறுபாடின்றிக் கரைந்தொழிவதுபோல கரைந்துவிட்டது என்கிறது இப்பாடல். சங்கஇலக்கியப் பாடல்களின் உவமை நயத்துக்கு இப்பாடல் ஒரு எடுத்துக்காட்டு.

குறுந்தொகையிலும், தாங்க இயலாத துன்பம் கொள்ளும் நெஞ்சை “பெயநீர்க் கேற்ற பசுங்கலம்” போல என்று சொல்லி கரையும் தன்மை சுட்டப்படுகிறது.

Transliteration:

salaththAl poruLseidE mArththal pasumaN
kalaththuLnIr peidirIi yaRRu

salaththAl – by falsehood, fraudulence, dishonesty and bad deeds
poruL seid(u) – earning wealth (who? The minister is implied)
Em Arththal – making the rulers happy (unsustainable though)
pasumaN kalaththuL – in a wet, unburnt clay pot (which can never retain water)
nIr peid(u) – pouring water
irI iyaRRu – and hoping to use it as a water holing vessel

A minister that makes his ruler happy by bringing wealth by dishonest means is like a person trying to hold water for useful needs in a wet clay pot which has not been burnt to make it strong to become a container. Neither will stay and serve the purpose. The wealth got by such means will not stay and so will the happiness, a transient one. Only the burnt mud pot can contain water, which also implies the ordeals one has to go through and the efforts needed.

Sangam anthology known for reflecting the native culture with appropriate similes, metaphors, has two references that are worthy of mentioning about the wet clay pot holding water, though not directly connected to the verse in focus.

NaRRiNai, mentions about a man leaving his place and his love for earning fortune coming to see his love. After seeing the tears in her eyes, his heart melts like the wet clay pot in torrential rains.

Kurunthogai uses it a similar context to talk about the heart that can not bear the pain and likens it to the clay pot in rain.

It is as useless to build wealth for the ruler by sinful deeds
as it is to use a wet clay pot to hold water for useful needs”


இன்றெனது குறள்:

பொய்ப்புரட்டால் ஆக்கமீட்டி இன்புறல் பச்சைமண்ணால்
செய்கலத்தில் பெய்தநீர் போல்

poippurTTAl AkkamITTi inbuRal pachchaimANNAl
seykalaththil peydanIr pOl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...