13th Feb 2014
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.
(குறள் 659: வினைத்தூய்மை அதிகாரம்)
அழக்கொண்ட எல்லாம்- பிறரை வருந்தச் செய்து ஒருவர் பெற்றவை
எல்லாம்
அழப்போம் - அவர்களே வருந்தும்படியாக
இழப்பர்
இழப்பினும் - ஆனால்
முன்பு விதிவலியாலோ, வேறுவகையாலே இழந்திருந்தாலும்
பிற்பயக்கும் - மீண்டும்
சிறப்பையே கொண்டு சேர்க்கும்
நற்பாலவை - நல்ல
வழியில் பெற்றவை
பிறர் மனம் வருந்தி கதறும்படியாக
அவருடைய உடைமைகளை கவர்ந்து கொள்பவர்கள் பின்பு அவற்றை, அவர்களே வருந்திக் கதறும்படியாக
இழக்கவும் செய்வர். ஆனால் நல்ல வழியில் பெற்றவை, முன்பு விதிவயத்தாலோ, அல்லது வேறு
வகையாலோ இழக்கப்பட்டிருந்தாலும், மீண்டும் இழந்தவரின் பயனுக்கே வந்துறும்.
இதே கருத்தை வெஃகாமை அதிகாரத்திலும் “படுபயன் வெஃகிப்
பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர் (குறள் 172) என்று கூறியிருக்கிறார். தமக்குரியதென்று
அல்லாதவற்றைக் கவர்தல் நடுநிலையற்ற செயல் என்றறிந்து அதற்கு வெட்கப்படுபவர், ஒருவர்
பொருளை முறையற்று கவர்ந்தால், தமக்குறும் பயன் மிக்கதாயினும் முறையற்று கவர்ந்ததோடு
மட்டுமல்லாது, அது பழிக்கப்படும் செயலென்றறிந்து, அச்செயலைச் செய்யமாட்டார்.
இவ்வாறு நடுவாண்மையும், பிறர்பொருளைக் கவராமையும் வினைத் தூய்மைக் கொண்டவர்க்கே
கூடுமாதலால், அறத்துப்பாலில் சொல்லப்பட்ட அக்கருத்தையே பொருட்பாலில், அமைச்சியலில்,
வினைத்தூய்மையிலும் வலியுறுத்துகிறார். மீண்டும், இக்குறள் அமைச்சியலில், அமைச்சருக்காகச்
சொல்லப்படுவதாக வகைப்படுத்தப்பட்டாலும், அனைவருக்குமே பொருந்தக்கூடியதே.
Transliteration:
azhakkonDa ellAm azappOm izhappinum
piRpayakkum naRpA lavai
azhakkonDa ellAm – making others miserable what one covets and
take from others
azappOm – will leave only the one who makes so miserable,
and weaping
izhappinum – Even if earlier lost (due to fate or other evil
designs)
piRpayakkum – later will yield only good
naRpAlavai – that which got through good ways
For others to feel
miserable and cry, when somebody covets others belongings, they will suffer the
same, losing all they took away from others; but what a person obtained through
good means, even if had been lost by fate or other evil designs, would come
back to their use, in good time.
The same thought
has been said earlier in the chapter of “Not coveting” in the canto of virtues,
in verse 172 – “paDupayan vehgip pazhipaDuva seyyAr naDuvanmai nANubavar”. Though said in the context of not coveting
others belongings, about how just people would not indulge in coveting even if
something was going to be useful, that verse also insisted purity of deeds
indirectly.
Yet again, this
verse though presumably said for ministers, is applicable to everyone, in
whatever they do.
“What is taken by making others cry, one will
lose it all - the same way!
But, though
may bring temporary loss, good deeds bring fruits of gay”
இன்றெனது குறள்:
பிறர்வருந்தப் பெற்றதுபோம் தாமழநன் றாயின்
சிறப்பே இழந்தும் தரும்
piRarvarudap
peRRadupOm thamazahna RAyin
siRappE
izandum tharum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam