பிப்ரவரி 08, 2014

குறளின் குரல் - 660

8th Feb 2014

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
                        (குறள் 654: வினைத்தூய்மை அதிகாரம்)

இடுக்கண் படினும் - துன்பமே உற்றாலும்
இளிவந்த செய்யார் - பிறர் தூற்றும்படியான் இழிவானவற்றைச் செய்யமாட்டார்
நடுக்கற்ற - தெளிவான, உறுதிப்பாடுள்ள
காட்சியவர் - தெளிந்த அறிவுப்பார்வை உள்ளவர்கள்

தாம் துன்பமே அடைந்தாலும், பிறர் தூற்றூவனவும், பழி மற்றும் இழிவைத் தேடித் தருவனவற்றையும் தெளிவான, உறுதியான அறிவை உடையவர்கள் செய்யமாட்டார்கள் என்பதே இக்குறள் சொல்லும் கருத்து. நடுக்கு அற்ற என்பது, தெளிவான அறிவினால் வரும் உறுதியான நிலை என்பது. வினைத் தூய்மையை, யாரை முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும் என்று சொல்லிக் கூறுகிறார் வள்ளுவர்.

Transliteration:

iDukkaN paDinum lIivanda seyyAr
naDukkaRRa kATchi yavar

iDukkaN paDinum – even if bombarded by misery
lIivanda seyyAr – will not indulges in acts that others blame and lood down upon
naDukkaRRa – unwavering, firm and clear
kATchiyavar – vision of knowledge.

People of clear and firm mind and learning will not do that which brings blame, and shame, even if they suffer, says this verse – a simple thought. The word “nadukku aRRa” means unshaken state, which comes out of doubtless erudition that gives firm footing.

“People of clear and firm erudition never indulge
 in that which brings blame and shame  as refuge


இன்றெனது குறள்:

துன்பமுற்றும் தூற்றுவன செய்யத் துணிந்திலர்
நன்குறுதி உள்ளநோக்கி னர்

thunbamuRRum thURRuvana seyyath thuNindilar
nangurudi uLLAnOkki nar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...