9th Feb 2014
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.
(குறள் 655: வினைத்தூய்மை அதிகாரம்)
எற்று என்று - எத்தன்மைத்தாய
குற்றம் நிறைந்த செயல்களைச் செய்துவிட்டோம் என்று
இரங்குவ - ஒருவர் தம்மையே நொந்து கொள்ளும்படியான
செயல்களைச்
செய்யற்க - செய்யாதீர்
செய்வானேல் - அவ்வாறு
ஒருவர் முன்பு செய்திருப்பானேயாயினும்
மற்று அன்ன - அவ்வாறு
மீண்டும் அத்தகைய தவற்றினைச்
செய்யாமை - செய்யாதிருத்தல்
நன்று - நன்மையாகும்
ஒருவர் ஏன் இத்தகு குற்றம்
நிறைந்ததான செயல்களைச் செய்துவிட்டோம் என்று தம்மையே நொந்து கொள்ளும் செயல்களைச் செய்யாமல்
தவிர்க்கவேண்டும். அவ்வாறு தவறி செய்திருப்பாரேயாயினும் மீண்டும் அத்தகையத் தவற்றினை
செயல்களைச் செய்யாதிருத்தல் நன்மையாகும்.
இக்குறள் தெரிந்து செயல்வகை
அதிகாரத்தில் சொல்லப்பட்ட “எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பதிழுக்கு” என்ற குறளின்
கருத்தை ஒட்டியிருப்பதைக் காண்க. செய்யும் வினைக்கு பின்பு இரங்காத அளவுக்கு வினைகளை,
தூய்மையோடு ஒருவர் செய்யவேண்டும் என்பதாலேயே இது வினைத்தூய்மையை வலியுறுத்துவதாகிறது.
இக்கருத்தையொட்டிய சங்க இலக்கிய பாடல்களின் மேற்கோள்கள் சில இதோ, கி.வா.ஜ-வின் ஆய்வு
பதிப்பிலிருந்து.
செய்து பின்னிரங்கா வினையொடு (அகநானூறு.
268:13)
செய்திரங்கா வினை (புறநானூறு 10:11)
கற்றார்முன் தோன்றா கழிவிரக்கம் (நான்மணி 8)
Transliteration:
eRRendRu iranguva seyyaRka seyvAnEl
maRRanna seyyAmai nanRu
eRR(u) endRu – what is this I have done
iranguva – to feel miserable as such
seyyaRka – never do that
seyvAnEl – even if he had do
maRR(u) anna – doing such mistakes
seyyAmai – not repeating the same
nanRu – is good
A person must avoid
doing tasks that he will regret for doing deviously in dishonest ways. Even if
he had done so by mistake, it is good if he does not to the same again, even by
mistake
This verse has a
meaning similar to “eNNith thuNiga karumam – thuNindapin eNNuvadenba
dizhukku, a verse we have seen earlier in the chapter of “doing knowing
what is done”. In essence, one must do
his tasks devoid of even inadvertent dishonesty and deviant designs.
“A
person must never do anything that he will greatly regret later
Even if done earlier, good it is not to repeat
the same again after”
இன்றெனது குறள்:
பின்னினைந்து உள்வருந்தச் செய்யாதீர் - செய்திருந்தால்
நன்றுமீண்டும் செய்யாமை அஃது
pinninaindu uLvarundach seyyAthIr seithirundAl
nanRumINDum seiyAmai ahdu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam