7th Feb 2014
ஒஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.
(குறள் 653: வினைத்தூய்மை அதிகாரம்)
ஓஒதல் வேண்டும் - ஓவுதல்
அதாவது தவிர்த்தல், விலக்குதல் வேண்டும்
ஒளிமாழ்கும் - தம்முடைய
புகழை, கீர்த்தியை கெடுக்கும்
செய்வினை - செய்யும் செயல்களை
ஆஅதும் - ஆகுதல்,
(எண்ணிய திண்ணிய முடிதல்) உயர்வான மேன்மையைக்
கொடுத்தல்
என்னுமவர் - வேண்டுமென
கருதுவோர்
வள்ளுவர், இக்குறளில் ஓஒதல், ஆஅதல் என்ற சொற்களுக்குப் பதிலாக இன்னும் எளிமையாக,
ஓவுதல், ஆகுதல் என்ற சொற்களைப் பயன்படுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. வள்ளுவர்
அடி எதுகையை அப்படியொன்றும் கட்டாயமாகக் கடைபிடிக்கவில்லையே. ஓவுதல் என்பது ஓஒதல் என்று குறைந்து
நின்றது என்பார் பரிமேலழகர். ஆஅதும் என்ற சொல்லுக்கும் “மேலாகக் கடவேம்”, அதாவது உயர்வுபட
செய்வோம் என்று வருமாறு பொருள் கூறியுள்ளார் வள்ளுவர். இச்சொல்லும் அசைநிறைச் சொல்லே,
“சீர்” அமைவுக்காவே சொல்லப்பட்டது. வேறு எதாவது
காரணங்களுக்குச் சொல்லியிருப்பாரா என்பதும் மற்றவுரைகளிலிருந்தும் தெளிவாகவில்லை.
இக்குறளுக்கு பொதுவாக சொல்லப்படும் உரை, ஒருவர், தாம் எண்ணியதை மேன்மையாக செய்து
முடிக்க விழைபவராக இருப்பின், புகழை மங்கவைக்கும், கெடுக்கும் விதமான வினையாற்றலை விலக்குதல்
வேண்டும், என்பதாகும்
மற்றொரு விதமாகப்
பார்த்தால், ( ஒளிமாழ்கும்
செய்வினை ஆஅதும் என்னுமவர், ஒஒதல் வேண்டும்)புகழைக் கெடுப்பதாக தாம் செய்யக்கூடிய
வினையானது ஆகிவிடக்கூடும் என்று அஞ்சுபவர், அச்செயல்களுக்குக் குற்றம் விளைவிப்பனவற்றை
விலக்கவேண்டும் என்று பொருள் படுகிறது. இதுவே வினைத்தூய்மையை வலியுறுத்துவதாகவும் உள்ளது.
அவ்வாறு குற்றங்களைந்த வினைத்தூய்மை, மேன்மையென்பது உள்ளுரைப் பொருளாக இருப்பதே சிறப்பாகவும்
இருக்கும்
Transliteration:
Oodal vENDum oLimazhgum
seivinai
Aadum ennu mavar
Oodal vENDum – must
avoid, discard
oLimazhgum – that
which brings down the esteem/ the earned ethical status
seivinai – deeds,
tasks, acts
Aadum –
yielding good and exalted state
Ennumavar – those
that desire such exalted state
VaLLuvar could have used simpler words instead of words like Oodal and
Aadal which seem to be kept primarily
for word metrical linkage purpose. The word “Oodal” is could have been very
well substituded by the word “Ovudal” which gives the intended meaning more
clearly and directly. Similarly, the word “Aadal”, is used primarily to keep
the linkage with the following word intact. What could have been VaLLuvars
other compelling reasons for such word usage are not evident through commentaries
of others and probably only known to him.
Usual commentary says, when someone want to accomplish the undertaken
tasks exceedingly well, he must avoid or discard unethical ways and show utmost
integrity in performing his deeds.
If the word order in the verse is changed and read, the verse seems to be
even more direct in saying what the chapter is set out to do, preaching purity
in doing things. When somebody thinks
what he does can be unethical, he must avoid them in his deeds; Doing them well follows such stance and exalted
state is a by product of this and must be an implied meaning only.
“Whatever
brings down the esteem, to the deeds and the doer
Must
he avoid as unethical faults to ensure purity as posture”
இன்றெனது குறள்:
புகழ்கெடுக்கும் எவ்வினையும் செய்யாமை வேண்டும்
புகழ்கொடுக்கும் மேன்மைவேண்டி யோர்
pugazhkeDukkum
evvinaiyum seyyAmai vENDum
pugazhkoDukkum
mEnmaivENDi yOr
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam