ஜனவரி 31, 2014

குறளின் குரல் - 652

31st Jan 2014

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.
                        (குறள் 646: சொல்வன்மை அதிகாரம்)

வேட்பத் - இவர் பேச்சைக் கேட்கவேண்டும் என்று பிறர் விழையத்
தாம் சொல்லிப் - தாம் பேசுதலும்
பிறர் சொல் - மற்றோர் சொல்லும் சொற்களின் பயனைச் சொல்வோர் இன்னார் என்று கருதாது
பயன்கோடல் - அவற்றால் உறும் பயனைத் தெளிவதும்
மாட்சியின் - அமைச்சுத் தொழிலிலே
மாசற்றார் - குற்றமற்று இயங்குவோரின்
கோள் - உறுதிப்பாடு.
      
இக்குறள் குற்றமற்று அமைச்சுத்தொழிலைச் செய்வோரின் உறுதிப்பாடு என்ன என்பதைச் சொல்லுகிறது. அத்தகையோர் மற்றோர் விரும்பும் வகையிலே பேசுவர். இன்னார் என்று கருதாது பிறர் பேசுவதில் உள்ள குற்றங்களைக் களைந்து, கொள்வதைமட்டும் கொள்வர்.

ஏற்கனவே இக்குறளின் கருத்தையே அறிவுடைமை அதிகாரத்தில், எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு  என்ற குறளிலும் வள்ளுவர் சொல்லியிருப்பது நினைவுகூறத் தக்கது. அக்குறளின் கருத்தை வேறு சொற்களில் கூறுவதே இக்குறள்.  இதே கருத்தைக் கூறும் பழமொழிப் பாடலொன்ற்று உண்டு. அது, “கேட்பாரை நாடி, கிளக்கப்படும் பொருட்கண் வேட்கை அறிந்து, உரைப்பார், வித்தகர்”.

Transliteration:

vETpathtAm sollip piRarsol payankODal
mATchiyin mAsaRRAr kOL

vETpath – For others to desire to listen to
tAm sollip – of such articulation
piRar sol – regardless who says, when others say something
payankODal – only taking the substance, discarding undesirable
mATchiyin – one who is a minister
mAsaRRAr – and does his work flawessly
kOL – their resolves and carriage.

This verse talks about the resolve and carriage required of a minister who is flawless in work. For others to desire and listen, would speak, such ministers; they would also consider what others say, discarding what is not right and taking only what makes sense regardless who those others are.

Already another verse (“eNporuLa vAgach selachchollith tAn piRarvAi nuNporuL kANba daRivu”,) conveying exactly the same thought has been done in a different chapter of “having intellect”. Only the words are different.  A verse from Pazhamozi nAnUru (“kETpArai nADi kiLakkappaDum poruTkaN vETkai aRindu, uraippAr viththagar”) expresses the same thought

“A flawless minister would speak words for others to desire!
 Would listen to others if the essence of its purpose is higher”


இன்றெனது குறள்:

மற்றோர் விரும்புபேச்சும் மற்றோர்சொல் கொள்பாங்கும்
குற்றமற்று உற்றோர் அமைச்சு

maRROr virumbupEcchum maRROrsol koLpAngum
kuRRamaRRu uRROr amaichchu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...