65: (Articulation - சொல்வன்மை)
[An able minister is the one who apart from having
the ablity to accomplish things skillfully, can articulate well his ideas, speak
clearly, and yet concisely. In the epic RamayanA, great Hanuman is known as “Sollin Selvan”, meaning a person who
knows how to use his words appropriately in any contextual situation, looking
around the people and place etc,. He is depitcted as the minister of SugreevA. He
was chosen the emissary of Rama to go to Ravana. His interactions with various
characters prove that definitely was perfect for that title. A tongue which is sweet, firm and advising
his ruler without fear, yet tactfully is the perfect minister]
26th Jan 2014
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.
(குறள் 641: சொல்வன்மை அதிகாரம்)
நா நலம் - சொல்வன்மை
என்னும் நலம் - என்று சொல்லப்படுகிற
செல்வமானது
உடைமை - இருக்கவேண்டிய செல்வம், உடைமை, வளம்
(அமைச்சருக்கு)
அந்நலம் - அச்செல்வம்
யாநலத்து - மற்ற எல்லா செல்வங்களும், நலங்களிலும்
உள்ளதூஉம் -இருப்பதோ, அல்லது அவற்றைப் போன்றதோ (புறவெளிப்பாடு கொண்டதோ)
அன்று - இல்லை (அவற்றையும் விட சிறப்பானது)
நா வன்மை என்று சொல்லுகிற,
பேசுகின்ற திறமை ஒருவருக்கு செல்வம் போன்றது.
எப்படி கல்வியென்பது செல்வமோ புறவுருவம் கொள்வதில்லையோ அதைப்போன்றதே சொல்வன்மையும்.
மற்ற செல்வங்களாகிய பணம், பொன், மனை, மக்கள், நல்ல குடும்பம், நண்பர்கள் எல்லாமும்
செல்வமே ஆனாலும், புறவெளிப்பாட்டிலே காணக்கூடியன.
சொல்வன்மை சிறந்த எண்ணச்
செறிவினாலும் (இது கல்வி மற்றும் பட்டறிவினால் வரக்கூடியது), அவற்றை உரிய நேரத்தில்,
உரியவாறு சொல்லும் திறமையாலும் அளவிடப்படுவது. கல்வியும், சிறந்த அறிவும் இதை உறுதி
செய்யமுடியாது. அதனாலேயே இச்செல்வத்தை மற்ற எவற்றோடும் வைக்க்கூடாது என்று சொல்லி,
நாவன்மையை மற்ற எல்லா செல்வங்களையும் விட சிறப்பானது என்று சொல்லாமல் சொல்லுகிறார்
வள்ளுவர்.
இராமாயணத்தில் அனுமன்
சொல்லின் செல்வன் என்று போற்றப்படுகிறான். மஹாபாரதத்தின் விதுரனும் நேர்ந்த மொழிகளைப்
பேசுகிறவானகத்தான் உருவகிக்கப்படுகிறான் ஆயினும் அவனைச் சார்ந்த கெளரவர்களுக்குப் ஏற்றவகையிலே
பேசவில்லை. அதனால் அவனுடைய நாவன்மை சிறப்பித்துப் பேசப்படவில்லை.
Transliteration:
nAnalam ennum nalanuDaimai annalam
yAnalaththu uLLaDum anRu.
nAnalam – gift of articulation
ennum nalan – the wealth that it is
uDaimai – is an important possession, wealth (for a
minister)
annalam – that wealth
yAnalaththu – among all other physical, visible or imaginary
wealths
uLLaDum – is placed
anRu – not (definitely superior to all other forms of wealth, possession)
Gift of
articulation is an important form of wealth for a minister; like how education
does not have physical manifestation, this also does not have physical
manifestation. Other forms of wealth such as money, gold, friends, family
children are seen, felt, tasted and enjoyed.
Articulation comes
out of excellent ability of thought and experience and is measured by how
effectively, appropriately it is used contextually; mere education and the
knowledge alone cannot ensure that. Hence vaLLuvar insists that this cannot be
placed among one of them and leaves it to our inference that it is the best
among all wealths.
In RamayaNa,
Hanuman is praised as a man of choicest words. In Mahabharata, though Vidura is
equally placed, his words were not either patalable or considered by Kauravaas,
his masters. This verse insists that the gift of gab, for ministers is an
important asset.
“Gift of articulation is an important asset;
not like
others, but aruguably the best”
இன்றெனது குறள்:
சொல்வன்மை செல்வமுடைத் தார்போல் - பிறநலம்போல்
அல்லாத சீர்த்த சிறப்பு
solvanmai selvamuDaith thArpOl – piRanalampOl
allAdA sIrththa siRappu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam