ஜனவரி 27, 2014

குறளின் குரல் - 648

27th Jan 2014      

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
                        (குறள் 642: சொல்வன்மை அதிகாரம்)

ஆக்கமுங் - நன்மை விளைவதும்
கேடும் - அழிவு வருவதும்
அதனால் வருதலால் - அதுவே விளைக்குமாதலால் (ஒருவர் பேச்சினாலேயே)
காத்தோம்பல் - காத்து ஓம்புதல் - கவனித்துத் தவிர்க்கவேண்டும்
சொல்லின்கட் - ஒருவர் பேசும் பேச்சிலே
சோர்வு - தவறாகப் பேசுதலால் வரும் குற்றத்தை

இக்குறள் அமைச்சர்களைப் பற்றி கூறும் அதிகாரத்தில் வருவதானாலும், அனைவருக்கும் பொருந்துவதே. பேசும் பேச்சிலே குற்றமற்று பேசுதல் வேண்டும். சொல்லும் சொற்களினாலேயே ஒருவருக்கு நன்மை விளைவதும், அல்லது அழிவு வருவதும் ஆகும்; ஆகையால், அடக்கமுடைமை அதிகாரத்திலே முன்பே சொல்லியபடி, “யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு  என்பதை துயரத்தையும் இழுக்கையும் தருவதோடு கேட்டினை விளைவிக்கும் சொற்குற்றத்தை யாவரும் தவிர்த்தல் நல்லது.

குறிப்பாக அமைச்சர் பதவியிலிருப்பவர்கள் இதைக் கடைபிடித்தல் தேவை. தனியொருவரின் சொற்குற்றம் அவருக்கே அழிவைத் தரும். அமைச்சர்களின் சொற்கள் சரியானவையானால் அவை அரசுக்கும், ஆள்வோர்க்கும், நாட்டினருக்கும் நலங்களையும், அவ்வாறு இன்றி குற்றமானால், அவை எல்லோருக்கே அழிவையும் தரும் என்பதால், சொல்லிலே சோர்விலனாதல் அமைச்சருக்கு இன்றியமையாத ஒன்று.

இவ்வதிகாரத்திலே பின்னால் வரும் மற்றுமொரு குறளில், (“சொலல் வல்லன் சோர்விலன்...”) அமைச்சர்கள், சொல் வல்லவர்களாகவும், சோர்வில்லாதவர்களாகவும் இருக்கவேண்டுவதைச் சொல்கிறார்.

இனியவை நாற்பது “சொல்லுங்கால் சோர்வின்றி சொல்லுதல் மாண்பினிதே” என்று சொல்லும்.  சொற்குற்றமே எல்லா குற்றங்களுக்கும் அடிப்படை என்பதை, “ சொற் சோர்வுடைமையின் எச்சோர்வும் அறிப” என்று முதுமொழிக் காஞ்சி சொல்கிறது. “சொற்சோர்வு படேல்” என்பது ஔவை ஆத்திச் சூடி வாக்கு.

Transliteration:

Akkamum kEDum adanAl varudalAl
kAththOmbal sollinkaT soRvu

Akkamum – gain
kEDum – and the loss
adanAl varudalAl – comes because of that (what?)
kAththOmbal – be restrained and avoid
sollinkaT – in spoken words
soRvu - mistakes

Though this verse is in the chapter, discussing an important aspect required of ministers, it is equally applicable to every individual. One must be devoid of careless utterings because, spoken words have the power to create both loss or gain, good or destruction. As already said in the chapter on “humility” (“yAkAvArAyinum nA kAkka”) one must be careful with his tongue as careless slips will bring humiliation and utter misery.

This is even more applicable and of paramount importance, to ministers as an individual’s slips only gainfully or otherwise affect him.; but a ministers words have the impact to make or break a whole country, rule and ruler.

In another verse, (“solal vallan sOrvilan..”) later in the chapter vaLLuvar says about ministers being gifted with choicest words as well as devoid of slips that can affect a whole lot.

This thoughty has been emphasized by other contemporary or later works such as “iniyavai nARpadu”, “mudumozhik kAnji” and auvvayyaArs “Aththi chUDi”.

“Since the ministers’ words have the power to make or break
 His utterances shall avoid careless slips for his country’s sake!”


இன்றெனது குறள்:

கூற்றிலே குற்றமொன்றுங் கூடாது ஆற்றலும்
கூற்றுமது வேயாவ தால்  (கூற்று - சொல்வது, அழிவைத்தருவது இரண்டுமாம்)

kURRilE kuRRamonRung kUDAdu ARRalum
kURRumadu vEyAva dAl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...