ஜனவரி 25, 2014

குறளின் குரல் - 646

25th Jan 2014

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.
                            (குறள் 640: அமைச்சு அதிகாரம்)

முறைப்படச் - முறையோடும், எண்ணச் செறிவோடும் திட்டங்கள்
சூழ்ந்தும் - தீட்டினாலும்
முடிவிலவே - குறைபடவே (முடிபடாத)
செய்வர் - செய்வார்கள் (செயல்களை)
திறப்பாடு - அமைச்சர் தொழிலைச் செய்யும் திறமைகள்
இலாஅதவர் - இல்லாத அமைச்சர்கள்

அமைச்சராக இருந்துகொண்டு, அதற்குரிய திறமைகள் சற்றும் இல்லாதவர், எவ்வளவுதான் முறையோடு திட்டங்கள் தீட்டப்பட்டாலும், அவை முடிவுறா வண்ணம், அதாவது குறைபடவே செய்வார்கள் என்பதுதான் இக்குறள் கூறும் கருத்து.

இக்குறளில் திறனில்லாத அமைச்சரால், திட்டங்கள் நிறைவேறாது என்பதை உறுதிபட கூறுகிறார் வள்ளுவர். அமைச்சர்களின் திறமையின்மையினால், செயல்கள் குறைபாடு அடைவதை ஆணி அறைந்தார் போல சொல்லி அதிகாரத்தை நிறைவு செய்கிறார் வள்ளுவர்.

Transliteration:

muRaippaDa sUzhndum muDivilavE seyvar
thiRappADu ilAa davar

muRaippaDa – that which are planned with a lot of thought and careful planning
sUzhndum – even such planning
muDivilavE – will be half done or never be done
seyvar – by them
thiRappADu – the skills required to be a minister
ilAadavar - ministers devoid of that.

Being a minister, if a person is appropriately skilled for the job, however careful and complete the planning is, the execution of his tasks will be incomplete and faulty always – says VaLLuvar in this verse.

A clueless minister cannot execute an plan or project to its fullest extent or reach as he is devoid of skills to see it through. – Without this sweeping statement of inadequacy being a spoiler, vaLLuvar concludes this chapter.

“Execution of all his plans incomplete, stinted
 for a minister without skills to execute gifted


இன்றெனது குறள்:

செயற்திறம் இல்லாதார் எண்ணஞ் சிறந்தும்
செயல்கள் குறைவுடைத் தே

seyaRthiRam illARdAr eNNanj  chirandum
seyalgaL kuRaivuDaith tE

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...