24th Jan 2014
பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.
(குறள் 639: அமைச்சு அதிகாரம்)
பழுதெண்ணும் - பிழையான
எண்ணத்தைக் கொண்டு தவறாக வழி நடத்துகின்ற
மந்திரியின் - அமைச்சரைவிட
பக்கத்துள் - அருகிலுள்ள
தெவ்வோர் - பகைவர்கள்
எழுபது கோடி - எழுபதுகோடியே
இருந்தாலும்
உறும் - அவர்களையே
பெறலாம்.
அடுத்துக்
கெடுக்கும் அமாத்தியனை (அமைச்சன்) விட பலகோடி எதிரிகளும் பக்கத்தில் இருக்கலாம் என்பதே
இக்குறள் சொல்லும் கருத்து. மீண்டும் “மந்திரி”
என்பது ஒரு வடமொழிச் சொல், அதனால், தூய தமிழிலே “அமைச்சர்” என்ற சொல்லை தற்காலத்தில் பயன்படுத்துவதை
நினைவு கூறவேண்டும். வள்ளுவனுக்கு அச்சொல் விலக்கக்கூடியதாக இல்லை என்பதை இக்குறள்
சொல்கிறது.
பழுது என்பதற்கு எதுகையாக எழுபது என்ற சொல்
பயன்படுத்தப்பட்டிருப்பதாகவே கொள்ளவேண்டியிருக்கிறது. முப்பது கோடி முகமுடையாள் என்று
பாரதியார், அவர் கால மக்கட்தொகையைச் சொல்லியிருக்கிறார். இரண்டாயிரம் வருடங்களுக்கு
முன்பு எழுபது கோடி மக்க இருந்தனரா என்பது கேள்விக்குறியதே. ஆனால் பலகோடி பகைவர்கள்
என்று கொள்ளலாம்.
Transliteration:
pazhudeNNum mandiriyin
pakkaththuL thevvOr
ezhubadu kODi uRum
pazhudeNNum –
Misguiding with wrong intentions
mandiriyin –
better than such ministers (misguiding)
pakkaththuL –
that are by the side
thevvOr -
enemies
ezhubadu kODi – even if seventy crores in
numbers
uRum – can
be there (for a ruler)
Better than a
misguiding minister of wrong intentions, even seventy crore enemies next to the
ruler, are better, says this verse.
The word “manthiri”
used in this verse is of Sanskrit origin; New age Tamil enthusiasts have
vehemently discarded, avoided using such words from other languages and have
substituted equivalent pure Tamil words.
Though nothing wrong with it, it is to be noted VaLLuvar did not have
issues with such usage.
As a side note, the
word “ezhubadhu” seems to be used just for rhyming purpose; otherwise, it has
no significant meaning here. Even Bharthiyar of last century cites only 30
crore people and we can be assured that the population was definitely not 70
crores during VaLLuvar’s times.
“It is better to have millions of enemies by
side
than wrongly
guiding, wicked minister instead”
இன்றெனது குறள்:
உடனிருக்கும் கோடியொன்னார் மேலாம் தவறாய்
தடங்காட்டும் நுண்ணிய ரின்
(கோடியொன்னார் - கோடி ஒன்னார்; நுண்ணியர் - அமைச்சர்;
தடம் - பாதை, வழி)
uDanirukkum
kODiyonnAr mElAm thavaRAi
thaDankATTum
nuNNiya rin
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam