22nd Jan 2014
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
(குறள் 637: அமைச்சு அதிகாரம்)
செயற்கை - செய்யும் செயல்களை ஆற்றும்
வகைகளை
அறிந்தக் கடைத்தும் - நூலறிவினால் கற்றறிந்த போதும்
உலகத்து - உலகத்தின்
இயற்கை அறிந்து - இயல்பில்
இருக்கும் வழக்கங்களை ஒட்டியே
செயல் - செய்வது
(அமைச்சருக்கு அழகு)
“உலகத்தோடு ஒட்டி வாழ்” என்னும் சொலவடையை
அமைச்சர்களுக்கு சிறப்பாகச் சொல்லுகிறது இக்குறள். ஒருவர் எவ்வளவுதான் நூல்களைக் கற்று
செயல்களை எவ்வாறு ஆற்றுவது என்று அறிந்தாலும், உலத்தில் இயல்பாக நடைமுறை வழக்குகளை
ஒட்டியும் செயலாற்ற வேண்டும் என்று இக்குறள் சொல்லுகிறது.
இக்குறள் கருத்து, “மக்கள்
தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்பதை ஆளுவோரும், அவருக்கு துணையிருக்கும் அமைச்சர்களும்
உணர்ந்து செயலாற்றவேண்டியதை உணர்த்துவதாகக் கொள்ளலாம். ஒரு கற்றறிந்த சமூகத்தில் நாட்டு
வழக்கு, உலக வழக்கு என்பதெல்லாம் பொருந்தி வருவதே, ஆயினும் கல்வியறிவு குறைந்த சமூகங்களில்,
பெரும்பாலோர் இயல்பிலே வழக்கென்று அமைச்சர்கள், பொதுவாக, கண்ணை மூடிக்கொண்டு செயலாற்றுவது
கூடாது! அவ்வகையில் இக்குறள் ஒரு அதிகார நிரப்பியாக, பொத்தம் பொதுவாக ஒரு கருத்தைக்
கூறுவதாகவே தோன்றுகிறது.
Transliteration:
seyaRkai – To accomplish any undertaken tasks
aRindak kaDaiththum – by learning from appropriate knowledge
sources
ulagaththu – ways of the world and
iyaRkai aRindu – understanding the nature of of how people
operate in general
seyal – a minister must perform his duties.
“One must go
along with the ways of the world” is a well-known principle. This verse
says that it as an important trait required of a minister. Regardless of how
much a minister is learned to perform his duties, he must observe how the
general populace views or operates and act accordingly. A purposelss stickler
of rules and learned ways is not a good administrator
Though the general
tone of this verse is applicable to everyone, this verse is realistic only for
a learned society that understands the ways of performing duties. When the
illiteracy pervades through the society, to blindly say a learned minister must
go along with the worlds view of things does seem to make sense.
This verse seems to
be another filler verse for this chapter, as the thought conveyed here, does
not have a punch or purpose to say something very meaningful.
“Though learned and skilled to perform his duties
A minister
must also consider how the world views”
இன்றெனது குறள்:
கற்றறிந்து செய்தல் அறிந்தும் உலகியற்கை
ஒற்றி ஒழுகலே பாங்கு
kaRRindu seydal aRindum ulagiyaRkai
oRRi ozhugalE pAngu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam