ஜனவரி 20, 2014

குறளின் குரல் - 642

20th Jan 2014
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
                            (குறள் 631: அமைச்சு அதிகாரம்)

அறன் அறிந்து  - நீதி நூல்களில் சொல்லப்பட்டவற்றை நன்கு கற்றறிந்து
ஆன்று அமைந்த - நிறைந்த கல்வியறிவால் செப்பமுடைத்த
சொல்லான் - வாக்காற்றலும் கொண்ட அமைச்சர்
எஞ்ஞான்றுந் - எப்போதும், என்றும்
திறனறிந்தான் - இதனை இவன் முடிக்கும் என்னும் பட்டறிவுடன், வினைத் திறம் கொண்டோரின்
தேர்ச்சித் - செயலாற்றலைத் தமக்குத்
துணை - துணையாகக் கொண்டு தம்பணியைச் செய்வர்

அமைச்சர்க்கு அழகு நீதி நூல்வகைகளை கற்றறிதல் (முன்னரே சொல்லப்பட்டது). அவ்வாறு நிறைந்த கல்வியறிவுடன், செப்பமுடையதான வாக்கினைக் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். அத்தகைய அமைச்சர்களே, எக்காலத்திலும், எப்பொழுதும், இவரிடம், இவற்றைக் கொடுத்தால் அதை திறமையுடன் முடித்திடுவர் என்னும் பட்டறிவுடன், அத்தகையோரின் செயலாற்றல் திறமையைத் தமக்குத் துணையாக் கொண்டு தம் பணியைச் செய்வர், என்பது இக்குறள் கூறும் கருத்து.

பாரதி அன்னைப் பராசக்தியை வேண்டுகின்ற பாடல் ஒன்று, அமைச்சருக்குச் சொல்லப்படும் குணநலன்களுக்கு மிகப் பொருத்தமாக இருப்பதைக் காணலாம்.

எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்;

திண்ணிய நெஞ்சம் வேண்டும் ;
 தெளிந்தநல் லறிவு  வேண்டும்;
………..
மனதி லுறுதி வேண்டும்; வாக்கினி  லேனிமை வேண்டும்;”

உலகமக்களின் சார்பில் தனக்காக வேண்டுவது போல், ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டியவற்றைப் பற்றி பாரதி பாடிய, பாடல், இவ்வதிகாரத்தில் அமைச்சருக்கு வேண்டிய குணநலன்களாக வள்ளுவர் சொல்லியிருப்பதை ஒத்திருக்கின்றன.

Transliteration:
aRanaRindu AnRamainda sollAnenj njAnRun
tiRanaRindAn tErchith thuNai

aRan aRindu – fully well versed in what is said in the books of ethics
AnR(u) amainda – highly refined with complete learning
sollAnenj – gifted with excellent articulation
njAnRun - always
tiRanaRindAn – knowing with experience, who can do what
tErchith – getting the duties done
thuNai – with the help of such skilled people

Good ministers shoud be well versed in books on ethics (as already said); they must have the faculty of good articulation with good erudition. Such ministers shall, with their experience find who can do what, how and have them in their company, support to accomplish their tasks.

BharatiyArs song “eNNiya muDidal vENDum”, though in the self-seeking tone, is meant for everyone, more applicable to an erudite minister. He says, all that wished must be done, good must be wished, must have resolute mind and clarity of thought; In the same poery he talks about having resolute heart and having a sweet tongue; Of course having the sweet tongue is always not advisable for ministers. More than being sweet they need to have clarity and firmness in their speech.

In that song, BharatiyAr, prays mother Goddess for all the above not only for himself, through him to the entire humanity. But most of them are applicable to a learned minister.

“Learned in ethics, with erudite scholarship, and a tongue of clarity,
 a minister must have support of persons that can do with alacrity”


இன்றெனது குறள்:
அறமும் நிறைவாக்கும் கொள்ளமைச்சர் என்றும்
திறத்தோரைக் கொள்வர் துணை

aRamum niRaivAkkum koLLamaichchar enRum
tiRaththOraik koLvar thuNai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...