ஜனவரி 14, 2014

குறளின் குரல் - 636

14th Jan 2014

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.
                            (குறள் 629: இடுக்கண் அழியாமை அதிகாரம்)

இன்பத்துள் - இன்பம் தருவன தமக்கு வந்தபோதும்
இன்பம் விழையாதான் - அவ்வின்பத்தை துய்க்கும் எண்ணம் இல்லார்
துன்பத்துள் - துன்பம் தருவன தமக்கு வந்தபோதும்
துன்பம் உறுதல் இலன் - அத்துன்பத்தையும் துய்ப்பது இல்லார்.

கடந்த குறளின் நீட்சியே இக்குறள். இன்பத்தை விரும்பாமை என்பது ஒரு நிலை. இது இன்பம் துய்க்கும் வாய்ப்பு இல்லாதவரை பெரும்பாலும் இருக்கும் நிலைதான். அல்லது “சீ! சீ! இந்த பழம் புளிக்கும்” என்னும், கிடைக்காத பழத்தை வெறுக்கும் நிலைதான்.

அப்படிப்பட்ட இன்பம் வாசற்கதவைத் தட்டி அணைத்துக்கொள்ள வந்தபோதும், அதில் திளைத்து, தன்னை இழக்காத தகைமை,  “தாமரை இலைத் தண்ணீர்” போன்ற நிலை பகவத்கீதை சொல்லும், “கர்ம யோக” நிலை. கண்ணன் காட்டும், “கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” என்பதை வாழ்வியலாக வாழ்ந்து காட்டும் நிலை.

அதையே இக்குறள் சொல்கிறது. எங்கே முன்சொன்ன கருத்தை தவறாகப் பயன் கொள்வார்களோ, என்ற எண்ணத்தினால் வள்ளுவர் தான் முன் சொன்னகருத்துக்கு ஒரு மேல்விளக்கமாக இக்குறளை எழுதியுள்ளார். அத்தகைய “நிஷ்காம்ய கர்ம சித்தர்கள்” தாம் துன்புறும் போது அத்துன்பத்தைப் பாராட்டி துன்புற்றதாக நினைப்பதில்லை. இன்புறும் நிகழ்வுகளிலும் இன்பத்தைப் பாராட்டுவதில்லை. புலன் சார்ந்த இன்ப துன்பங்களைப் பாராட்டாதவர்கள் அத்தகையோர்.

Transliteration:

inbaththuL inbam vizhaiyAdAn thunbaththuL
thunbam uRudhal ilan

inbaththuL – Even if pleasure knocks the door
inbam vizhaiyAdAn – a person that does not desire that
thunbaththuL – even when the painful misery sets in
thunbam uRudhal ilan – does not get affected by that

This verse is an extention of previous verse. Not desiring pleasure is a state of being. For those who don’t have an opportunity for pleasure, it is the only state that can be – a state of sour grapes.

When such a peasure knocks the door, those who do not immerse themselves and act as “water droplets on lotus leaf” live the life preached by Krishna in Bhagavat Geetha – Karma Yoga.  This verse shows the way of life of, “Do your duty with out expectations of outcomes”.

After writing the previous verse, vaLLuvar perhaps had a doubt if it would be interpreted wrongly and hence he has further clarified the thought with this verse. Such detached souls who do their duties as “nishkaamya karma” and never worry about painful or pleasurable happenings; they do not succumb to physical pleasures.


இன்றெனது குறள்:

இன்பமுற்றும் துய்க்குமிச்சை இல்லாதார் துன்புறார்
துன்பமே உற்றுழன் றும்

inbamuRRum thuykkumichchai illAdAr thunbuRar
thunbamE uRRuzhan Rum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...