13th
Jan 2014
இன்பம் விழையான்
இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல்
இலன்.
(குறள் 628: இடுக்கண் அழியாமை அதிகாரம்)
இன்பம் விழையான் - தன்னுடைய புலன்களுக்கு இன்பமென்று விரும்பித் தேடான்
இடும்பை - துன்பம் தரும் நிகழ்வுகளால்
இயல்பென்பான் - கலங்காது அவை இயற்கையாக நடப்பன என்று கலக்கமும் கொள்ளாதவனுக்கு
துன்பம் - உடலளவில், உள்ளத்தளவில் துன்பமென்று
உறுதல் இலன் - எதையும் உணர்வதில்லை
மற்றொரு தொன்மொழியாம் தேவநாகரியில் “ஸ்திதப் ப்ரக்ஞன்”
என்னும் சொல், இன்பமும் துன்பம் இரண்டையும் ஒன்றெனவே எண்ணும் திட சித்தத்தினரைக்
குறிக்கும். அத்தகையவர்களைப் பற்றியதே இன்றைய
குறள். ஆதி சங்கரர் எழுதிய பஜகோவிந்தத் துதியில்
“சத் சங்கத்வே
நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்ஸலதத்வம்
நிஸ்ஸலதத்வே ஜீவன் முக்தி”
என்னும் பாடல் இங்கே நினைவு
கூறத் தக்கது. நல்ல ஆன்றோர், சான்றோர்களின் சேர்க்கையினால், வாழ்வின் தத்துவங்களில்
உள்ள ஐயங்கள் முற்றிலும் நீங்கும்; ஐயங்கள் நீங்கினால் ஆசைகளும், பற்றுகளும் நீங்கும்;
ஆசைகளும், அதனாம் வரும் பற்றுகளும் நீங்கினால் சஞ்சலமற்ற திடச் சித்தம் தோன்றும்; இந்த
திடச் சித்தம் வந்துவிட்டால் முக்தி கிடைக்கும், அதாவது, உயிர்வாழும்போதே யோகிகள் ஆகிவிடுவோம்.
இத்தகைய யோகநிலையினருக்கு, இன்ப துன்பங்கள் என்ற பாகுபாடுகள் ஏதுமில்லை.
இன்றைய குறள் கூறுவது இதுதான். புலனின்பங்களை விழையாது, துன்பங்கள் வாழ்வில்
இயல்பானவை என்று சொல்லுபவர்கள் துன்பங்கள் என்று எதையும் நினைக்கமாட்டார். அதனால் அவர்களுக்குத்
துன்பங்களும் இல்லை.
இன்றைய குறளைப் படிக்கும்போது, வள்ளுவரின் குறளே எளிமையாகவும் இருப்பதால் மாற்றுக்
குறள் தேவையா என்று இன்று தோன்றியது. ஆனால்,
இம்முயற்சியைத் தொடங்குவதற்கு முன்பு குறளுக்கு எளிமையாக மாற்றுக் குறள்கள் மூலமாக,
இன்றைய தலைமுறைக்குப் பொருள் சொல்லவேண்டுமென்றும், மற்றும் பழக்கத்தில் இல்லாத சொற்களை
மீண்டும் புழங்கலுக்குக் கொணரவேண்டுமென்று ஏற்பட்ட விழைவுதான் இதற்குக் காரணம் என்று
என்னை நினவுபடுத்திக்கொண்டேன். அதனால் எளிமையான குறளாக இருந்தாலும் இன்றைய குறளுக்கு
மாற்றாக இரண்டு குறள்கள்.
Transliteration:
inbam vizhaiyAn iDumbai iyalbenbAn
thunbam uRudal ilan
inbam vizhaiyAn – A person who does not seek pleasures for
senses
iDumbai – thinks that misery causing happenings
iyalbenbAn – are by natures design and does not feel extremely
elated or affected
thunbam – misery either bodily or in heart
uRudal ilan - does not feel any such misery
Sanskrit language has a word “Stitap prgnjan” which is used to refer to
persons that are equanimous under extreme situations of elation or depression.
Todays’ verse is about such people. In Bhajagovindam, work of Adi Sankara, a
sloka reflects the theme that leads to such equanimous state. The verse is:
“sath sangathvE
nissankathvam – nissankatway nimOhathvam
nimOhathvE nissalathathvam – nissalathathvE
jIvan mukthihi”
This translates to: Company of wisemen clears the clouded state of mind
in life. Unclutterd, unclouded mind leads to desireless, detached life;
desireless, detached life leads to the perpetual peace of mukthi to fructify –
we become living yogis devoid of differences in mind to see pleasure and pain
as two different states.
The verse says, those that do not desire pleasures, treat pain as
something that is natural and bound to be there; they will not feel any pain of
miseries.
While reading todays verse, it felt the verse was already very simple to
comprehend and why would I need to write another. I had to remind myself that the intent to
start with was to do an intepretation in the same meter as the original is and
also use simpler words. For most part, it has been met. Another objective was
to give word meaning for some of the words which have gone out of vogue. Hence
as a reminder and reinforcement to the original intent, we have two alternate
verses.
“Those that desire no pleasure, take pain as
natural;
they
have pain none in their life as they are rational”
இன்றெனது குறள்(கள்):
இச்சையிலார் இன்பத்தில் துன்பம் இயற்கையென்பார்
துச்சமென்று துன்பை மதித்து
icchaiyilAr inbaththil thunbam iyaRkaiyenbAr
thuchchamenRu thunbai madiththu
இன்பத்தில் இச்சையில்லை இன்மை இயற்கையாம்
துன்பு துயரென்றி லார்க்கு
inbaththil icchaiyillai inmai iyaRkaiyAm
thunbu thuyarenRi lArkku
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam