ஜனவரி 12, 2014

குறளின் குரல் - 634

12th Jan 2014

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
                            (குறள் 627: இடுக்கண் அழியாமை அதிகாரம்)

இலக்கம் உடம்பு - இவ்வுடலே குறி, இலக்கு
இடும்பைக்கென்று - வரும் துன்பங்களுக்கெல்லாம் என்று
கலக்கத்தைக் - மனம் நொந்து, கலங்கி
கையாறாக் - அதனாலே வருந்தித் துன்பப்படுதலை
கொள்ளாதாம் - கொள்ளமாட்டார்
மேல் - மேலான அறிவுடையோர், மிக்கோர்

இவ்வுடலின் நிலையில்லாமையை உணர்ந்த அறிவில் மிக்கோர், எல்லாத் துன்பங்களுக்கும் தம் உடலே இலக்கென்று அறிவு மயங்கி, அதனால் மேலும் வருந்தி மனம் கலங்கார், என்பதே இக்குறள் சொல்வது.

அறிவுடையோர் தம் உடலுக்கு வரும் துன்பங்களை உள்ளத்தோடு தொடர்புறுத்தார். உடலும், ஆன்மாவும் வெவ்வேறு என்பதை உணர்ந்தார்க்கு, உடலுக்கு வரும் துன்பங்கள் உள்ளத்தைத் தொடுவதில்லை என்னும் நுண்ணிய கருத்தும் இக்குறளால் உணர்த்தப்படுகிறது.

Transliteration:

Ilakkam uDambiDumbaik kenRu kalakkaththaik
kaiyARAk koLLAdAm mEl

Ilakkam uDamb(u) – this body is the target
iDumbaikkenRu – for all miseries (thinking so)
kalakkaththaik – feeling miserable, shattered inside
kaiyARAk further miserable on account of that
koLLAdAm – will not mind
mEl – the wisemen

Wisemen, knowing the impermanence of this physical body, will not further subject themselves to misery thinking, for all their miseries the body is the sole target,– says this verse. Wisemen will not link the bodily discomforts to the soul; they know that the soul and body are not attached to each other as the soul transcends births.

“Wisemen donot feel miserable thinking their body
 is the target of all miseries, to sink more in malady”


இன்றெனது குறள்:

துன்பப் புகலிடம் இவ்வுடலென் றுள்சலித்து
துன்புறார் மிக்கோர் தெளிந்து

thunbap pugaliDam ivvuDalen RuLsaliththu
thunbuRAr mikkOr theLIndu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...