11th
Jan 2014
அற்றேமென்று அல்லற்
படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா
தவர்.
(குறள் 626: இடுக்கண் அழியாமை அதிகாரம்)
அற்றேமென்று - செல்வம் இல்லாதொழிந்ததே என்று
அல்லற் படுபவோ - துன்பப் படுவரோ?
பெற்றேமென்று - செல்வம் உள்ளதே என்று
ஓம்புதல் - அதை தமக்கென காத்து வைத்தலை
தேற்றாதவர் - அறிந்து தெளியாதவர்
இக்குறளுக்கு இரு விதமாகப் பொருள்
சொல்வோர் உண்டு. செல்வம் இருக்கும்போது அதை தம்மிடமே வைத்துக் கொள்ளாமல் பிறர்க்காய்
செலவழிப்பவர்கள், செல்வம் அழிந்தபோது துன்பப் படுவரோ? என்ற கேள்வியை முன்வைப்பர் ஒருசிலர். செல்வத்தைப்
பேணிக் காவாதார்க்கு, அது தொலைந்த போது துன்பப் படுவதில் ஒரு பயனும் இல்லை என்பது வேறு
சிலர் சொல்லும் பொருள். முதலில் சொன்ன பொருளை செல்வம் இருப்பவரின் ஈகைத் தன்மையாகவும்
கொள்ளலாம், அல்லது ஊதாரித்தனமாகவும் கொள்ளலாம்.
Transliteration:
aRRemenRu allaR paDubavO peRREmenRu
Ombudal thERRA davar
aRRemenRu – That all wealth has depleted
allaR paDubavO – will they feel miserable ? (who)
peRREmenRu – when they have all wealth
Ombudal – to protect and keep it for self not spending
thERRAdavar – not knowing such selfishness
This verse can be interpreted in two different ways. (1)
When someone has a lot of wealth, without keeping it for self, if they spend it
all on others, will they feel miserable when lose it all? (2) When somebody
does not know how to keep the wealth they obtained, is there any use in feeling
miserable when they lose it? Probably not, is the answer in both cases. In the
first case, the act of spending for others could either be benevolence or being
a spendthrift. Given the context of this chapter the first interpretation with
benevolence seems to make sense.
“Who is not boastful about the wealth when possessed -
would he feel
miserable, when is completely depeleted?”
இன்றெனது குறள்:
உற்றசெல்வம் கொள்ளார் கொடையர் தமக்கென்று
அற்றபோது கொள்வரோ துன்பு?
uRRasevam koLLAr koDaiyar thamakkenRu
aRRapOdu koLvarO thunbu?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam