ஜனவரி 10, 2014

குறளின் குரல் - 632

10th Jan 2014

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.
                            (குறள் 625: இடுக்கண் அழியாமை அதிகாரம்)

அடுக்கி வரினும் - தொடர்ந்து வந்தாலும்
அழிவிலான் - தன் உள்ளத்தில் துவளாத ஒருவர்
உற்ற இடுக்கண் - அடையும் துன்பமானது
இடுக்கட்படும் - இவரைத் துவளச் செய்யமுடியவில்லையே என்று தானே துவண்டு துன்புறும்

இக்குறள் சொல்வது 623 வது குறளில் சொன்ன கருத்தையேதான். ஒரே வேற்றுமை, இங்கு அடுக்கடுக்காக வரும் துன்பமெனச் சொல்லப்பட்டுள்ளதுதான். தொடர்ந்து துன்பமாக வந்து கொண்டிருக்கும் போதிலும், துவளாத உறுதியுடையவர் அடைகின்ற துன்பமானது, இவரை துன்புறுத்தித் துவளச் செய்யமுடியவில்லையே என்று தன் முயற்சியில் தோற்று துன்புறும்.

இக்குறளாலும், வள்ளுவர் விதி என்பதன்பால் கொண்டுள்ள நம்பிக்கை மறைத்து வெளியிடப்படுகிறது. துன்பம் துன்பபடுமா? துன்பத்தை விளைக்கக்கூடிய செயல்களும் துன்பப்படா. அச்செயல்களைச் செய்கின்ற மக்கள் துன்பப்படலாம். ஆனாலும் அவ்வாறு சொல்லாது, மற்றவர்களைக் கொண்டு, விதியென்னும் கண்களுக்குத் தெரியாத சூத்திரம் ஒன்று ஒருவரை துன்பப்படுத்துவதைத்தான் இங்கு உணர்த்துகிறார்.

Transliteration:

aDukki varinum azivilAn uRRa
iDukkaN iDukkaT paDum

aDukki varinum – even if it comes continuously (misery caused by hardship)
azivilAn – who does not get dejected
uRRa iDukkaN – the hardship that he gets
iDukkaTpaDum – will feel miserable at its failure

This verse is repetition of verse 623 with a difference of hardship mentioned as being incessant. Under such incessant miserable hardship, a person who is not dejected will make the hardship feel miserable for not accomplishing its intent.

In a very subtle way vaLLuvar conveys his belief in “fate”; of course he has devoted a whole chapter on this topic. Will hardship ever feel dejected like people of senses? People that give hardship to other will feel miserable if their attempts fail; but without saying so, he alludes to fate being an unseen force, creating hardship for others.

“Hardship faces hardship, despite its incessant attempts
 When a person is not dejected, and crushed all its efforts”


இன்றெனது குறள்:

துன்பம் தொடர்ந்தே வரினும் துவளார்தம்
துன்பம் துவண்டுதுன்பு றும்

thunbam thoDarndE varinum thuvaLArtham
thunbam thuvaNDuthunbu Rum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...