ஜனவரி 15, 2014

குறளின் குரல் - 637

15th Jan 2014

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
                            (குறள் 630: இடுக்கண் அழியாமை அதிகாரம்)

இன்னாமை - துன்பம் வந்தபோதும்
இன்பம் - அவற்றையும் இன்பம்
எனக் கொளின் - என்று கொண்டுவிட்டால்
ஆகு(ம்) - இவ்வாறு ஆகும் (எவ்வாறு?)
தன் ஒன்னார் - ஒருவரோடு பகையுறவில் இருப்பவர்களும்
விழையுஞ் - (அவரை) விரும்பத்தக்க வகையில்
சிறப்பு - பெருமதிப்பு உண்டாகும்

பிறர் துன்பத்தில் இன்பம் காணுபவர்கள் நிறைந்த உலகம் இது. இதில் தம்முடைய துன்பத்தை இன்பமாகக் கருதுபவரைப்பற்றிய குறளிது.

பொறையுடைமை அதிகாரத்தில் ஏற்கனவே படித்துள்ள ஒரு குறளை நினைவு கூர்தல் நல்லது. அக்குறள்: “ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரை பொன்போற் பொதிந்து”. யார் எத்தகு துன்பம் வந்தாலும் பொறுத்திருப்பர்? பொறையுடைமை, அதாவது பொறுமை உள்ளவர்களை, பகைவர்க்கும் அருளும் நன்னெஞ்சினரை எல்லோரும் போற்றுவர்; தண்டிப்பவரை அவ்வாறு செய்யார் என்பதே அக்குறள் சொல்வது.  அத்தகு பொறுமையுடையவர்கள் துன்பம் வந்தபோதும் அவற்றைப் பொறுப்பர். ஆனாலும் இன்பமெனக் கொள்வரோ?

இக்குறள் அதையும் தாண்டி துன்பம் தருவதையும் இன்பமாகக் கொள்ளும் மன நிலையைச் சொல்லுகிறது. “கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயம்” என்னும் அப்பர் பாடல் கூட அவருக்கு நமச்சிவாயத்தில் இருக்கும் நம்பிக்கையைக் காட்டினாலும், அவர் அதை துன்பமாக உணர்ந்ததைத்தான் காட்டுகிறது. “இடுக்கண் வருங்கால் நகுக” என்று வள்ளுவர் முன்பு சொன்னதும் இதைக் குறித்துதான்.

இன்பம் என்பதெல்லாம் துன்பம் என்ற தத்துவத்தின் மறுபக்கம்தான் துன்பமும் இன்பமே என்ற மனப்பாங்கும், இதுவும் கடந்து போம் என்னும் விலகி நின்று வாழ்க்கை நிகழ்வுகள் இரசித்து இன்புறுவதும். சொல்வது எளிது, கைக்கொள்ளுதல் கடினம். இக்குறளே கூட, துன்பம் என்று உணர்ந்ததை முதலில் சொல்லுகிறது, பின்னர் அதை இன்பமாகக் கொள்வதைக் கூறுகிறது. துன்பம் என்று உணர்ந்த நொடியே இன்பம் இல்லாமல் போகிறதே!

குறள் சொல்லும் கருத்து கடவுளைப் போல் காணாத ஒன்றெனினும் இதுவே: “துன்பத்தையும் இன்பமாகக் கொள்ளுபவர்கள், அவர்களது பகைவராலும் விரும்பத்தக்க பெருமதிப்பைப் பெறுவர்” என்பதுதான்.

Transliteration:

innAmai inbam enakkoLin Agumthan
onnAr vizhaiyum siRappu

innAmai – When the painful happens,
inbam – even that is pleasure;
enak koLin – when construe as such,
Agum – this happens! (what? )
than onnAr – even that persons’ enemies
vizhaiyum  do desire
siRappu- such great respectful, reverential disposition

The world is full of people that rejoice in others misery; given that this verse is about the people that find happiness even in unhappy miserable, painful situations.

We have read in the chapter of “Patience” that everyone will praise and preserve as gold, people of utmost patience; those who punish without the virtue of patience will not have the same status and even be despised.

This verse goes beyond the patience to advocate feeling happy in such painful situations. When savite saint poet “appar” said “kaRRuNai pUTTiyOR kaDalil pAichinum naRRuNaiyAvadhu namachivAyam”,  he definitely understood the pain of such punishment. The moment someone feels something is painful and says that is pleasurable, then the pleasure is just farce. vaLLuvar in a previous verse said, “iDukkaN varungAl naguga”. To smile in adverse situation of pain is an elevated mindset, but to think it is indeed pleasurable is impractical.

Pleasure is nothing but pain is a philosophical page and its other side is “pain is pleasure”. This is a mindset, that auto suggests that “even this will go past”, and enjoys what happens to self, staying away from self – easy to preach, but extremely difficult and nearly impossible to practice. Even this verse says, “pain” first before talking about thinking of that as “pleasure”. The moment pain is felt, to think of “that” as pleasure is self-cheating exercise.

This verse talks about something which is like God – not seen by most; those who treat even pain as pleasure will attain a reverential state even liked by enemies.  The verse belongs to utopia; but then again in utopia, where is pain?

“Those that treat whatever seen as painful as pleasure
 Even their enemies treat them as reverential treasure”


இன்றெனது குறள்:

துன்பத்தை இன்பமாகக் கொள்வார்க்குக் கொல்பகையும்
நன்மதிப்பை நல்கும் நயந்து

thunbaththai inbamAgak koLvaRkkuk kolpagaiyum
nanmadippai nalgum nayandu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...