63:(Imperturbability in
distress -இடுக்கண் அழியாமை)
[Subsequent to chapters on Zeal, Avoding
Sloth and Persistent Effort, the last in the series of chapters under the group
of aphorisms said for rulers, is on not being perturbed at the face of
difficulties and distress. In trying to be accomplished rulers, there are bound
to be challenges, difficulties and distressing situations. A ruler must be
resolute, not getting disheartened by any impediments or adversities]
6th Jan 2014
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
(குறள் 621: இடுக்கண் அழியாமை அதிகாரம்)
இடுக்கண் வருங்கால் - துன்பம் தருவன் வருங்காலை
நகுக - அதைக்கண்டு சிரித்துப் பழகுக
அதனை - அத்துன்பத்தை
அடுத்தூர்வது - எதிர்த்து, வெல்வதில்
அஃதொப்பது இல் - அதற்கு இணை ஏதும் இல்லை
இவ்வதிகாரத்தின்
முதற்குறளிலேயே உள்ளத்தில் ஊக்கம் தரும்படியான ஒரு கருத்தைச் சொல்லுகிறார் வள்ளுவர். யாரொருவர், அவருக்கு துன்பம் தருவன வரும்போது, அவற்றைக்
கண்டும் வந்த துன்பங்களை பொருட்படுத்தாது, சிரித்து, அவற்றைத் துச்சமாக எண்ணுகிறார்களோ,
அவர்கள் அவற்றை அக்கணமே வென்றவர்கள் ஆகிறார்கள்.
அவர்கள் உள்ளத்தின் கண் ஊக்கம் உள்ளவர்கள். துன்பத்தினால் சோர்விலாதவர்கள்.
இத்தகு
மனத்திண்மை, “காலா என்னருகே வாடா உனை சற்றே
காலால் உதைக்கின்றேன்” என்று பாரதி சொன்னதைப் போன்றது. சீவகசிந்தாமணியில் திருத்தக்க
தேவர் கூறும் இவ்வரிகளும் இதே கருத்தைக் கூறுகின்றன. இடுக்கணைக் கண்டு நகுதல் அதை வெட்டுகிற
வாள் போன்றதாம்.
இடுக்கண் வந்துற்ற
காலை, எரிகின்ற விளக்குபோல
நடுக்கம் ஒன்றானும்
இன்றி நகுக, தாம் நக்க போது அவ்
இடுக்கணை அரியும்
எஃகாம், இருந்தழுது யாவருய்ந்தார்?
Transliteration:
idukkaN varunkAl naguga adanai
aDuththUrvadu ahdoppa dil
idukkaN varunkAl – In times of distress
naguga – learn to laugh it off
adanai – that distressing situation
aDuththUrvadu – to win over (that distress)
ahdoppad(u) il – there is none compare to that stance
In the very first verse of this chapter, vaLLUvar says an
encouraging and invigorating thought to ponder over. During the times of
distress, one who knows how to ignore them and laugh them off, win over the
distress right away. They are tireless
in their pursuits and never get depressed when adversities present.
Poet Bharatiiyar shows a rare resolve that is only so typical of
him and says: “kalA ennarugE vADA”;
he dares the Death God to come close to him and he warns that he would kick
him. A similar verse has been said by
Thiruthakka dEvar in Cheevaga ChintAmaNi , where it says, laughing off at
distress is like slicing it with a sword.
“Laugh off distress as insignificant when it
is present
None
compare to that to give happiness as a present”
இன்றெனது குறள்:
துன்பமுறும் காலை சிரித்ததை வெல்வதிலும்
இன்பமுற வேறென்ன உண்டு?
thunbamuRum
kAlai sirththadai velvathilum
inbamuRa
vErenna uNDu?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam