5th Jan 2014
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
(குறள் 620: ஆள்வினையுடைமை அதிகாரம்)
ஊழையும் - வலிய விதியையும்
உப்பக்கம் - புறமுதுகுக்
காண்பர் - காட்டச் செய்வர்
உலைவின்றித் - தளராமலும், செய்வதா, வேண்டாமா என்னும் அலையும்
புத்தி இல்லாமை
தாழாது - குறையாது (உழைப்பில்)
உஞற்றுபவர் - முயலுபவர்
இவ்வதிகாரத்தின் இறுதிக்
குறளில், அலையும் புத்தி இல்லாமலும், உழைப்பில் தளராமலும் முயற்சி இருக்கும் ஒருவர்,
அவரின் வாழ்வை முடிவுசெய்வதாகக் கருதப்படும் வலிய விதியாகிய எதிரியும் கூட புறமுதுகுக்
காட்டும் படியாகச் செய்துவிடுவராம். இக்கருத்தை ஒட்டியே கீழ்காணும் கம்பராமாயணப் பாடல்
வரிகள் இருப்பதைக் காணலாம்.
“உற்றது கொண்டு
மேல்வந்துறு பொருளுணருங் கோளார் மற்றது வினையின் வந்ததாயினும் மாற்றலாற்றும் பெற்றியர்” (கம்பராமாயணம் மந்திரப்படலம் 7).
முயலாமையில்லார்க்கு முயலுக்கும் ஆமைக்குமான ஓட்டப்பந்தயத்தில்
முயலுக்கு ஏற்பட்ட நிலைமைதான்
Transliteration:
Uzaiyumm uppakkam kANbar
ulaivinRith
thAzhAdu unjaRRu bavar
Uzaiyumm – what is
considered unfortunate fate
uppakkam – showing
back
kANbar – will make
(who)
ulaivinRith – without
vacillating
thAzhAdu – and be
slackening
unjaRRubavar – those who
pursue persistently
Without
vascillating in mind, and slackening in effort, a person who pursues
persistently will even beat and make the unfortunate fate run showing its back,
says vaLLuvar in this last verse of the chapter.
The Tamil word “muyalAmai”
means “not trying”. The word can be split into two words, muyal (rabbit), and
Amai (turtle). In the popular story involving rabbit and turtle, the fact that
the turn won is because of its relentless effort and the rabbit lost for lack
of it. So the rabbit lost because not trying with the same consistent effort.
“Will run showing its back, fate -
For
person of persistent pursuit “
இன்றெனது குறள்:
புறங்காட்டும் வல்விதியும் உள்ளம் சலியாத்
திறம்முயற்சி கொண்டுழைப் பார்க்கு
puRangkATTum valvidiyum uLLam saliyAth
thiRammuyarChi koNDuzhaip pArkku
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam