டிசம்பர் 27, 2013

குறளின் குரல் - 619

28th Dec 2013

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
                            (குறள் 612: ஆள்வினையுடைமை அதிகாரம்)

வினைக்கண் - ஒரு செயலில் ஈடுபடும் போது
வினைகெடல் - அச்செயல் கெடும்படியாக
ஓம்பல் - செய்வதாகிய
வினைக் - செயல் (அதாவது, முழுமையாக செய்யாது கைவிடுதல், அல்லது நீட்டித்தல்)
குறை - குறைப்பாட்டினை
தீர்ந்தாரின் - நீங்கியவரை
தீர்ந்தன்று - நீங்காது
உலகு - இவ்வுலகம்

மீண்டும் மழுப்பலான உரையை பரிமேலழகர் உட்படப் பலரும் செய்துள்ள குறள். நேரடியாகப் பொருட்கொண்டாலே தெளிவாக விளங்குகிறக் குறள். இவ்வதிகாரத்தின் கருத்தோடு இயந்து சொல்லப்படும் குறள் இது. ஆனால் சொற்கள் உணர்த்தும் பொருளை நேரடியாகக் கொள்ள சற்றே சவாலான குறளிது. 

ஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயல் கெடும்படியாக செய்வதை, அதாவது அதை கைவிடுதலும், நீட்டித்தலும் ஆகிய குறைபாடுகள் நீங்கியவரை நீங்காது, அதாவது கைவிடாது இவ்வுலகம் என்பதே இக்குறளின் நேரடிக்கருத்து. மணக்குடவர், காளிங்கர், பரிதியார்,கவிராஜ பண்டிதர் போன்றைய பழைய உரையாசிரியர்களும், மு.வ, திருக்குறள் முனுசாமி, மு.கருணாநிதி, சாலமன் பாப்பையா போன்ற தற்கால உரையாசிரியர்களும் இக்குறளுக்குச் சரியானபடி பொருள் சொல்லவில்லை. இதற்கு மாற்றுக் குறள் எழுதும்போது முதலில் பின்வருமாறு எழுதினேன். 

அரிதென்று தள்ளற்க எவ்வினையும் - தள்ளின்
உரியரல்லர் வாழ உலகு

இதுவும் உண்மையெனினும், அது நேரடியான பொருளையும், குறள் கருத்தோடு ஒட்டிய பொருளையும் தராமையின், மற்றுமொரு மாற்றுக்குறளும் எழுதினேன்.

Transliteration:

vinaikkaN vinaikedal Ombal vinaikkuRai
thIrndArin thIrndanRu ulagu

vinaikkaN – when engaged in deeds
vinaikedal – for that deed to spoil
Ombal – doing
Vinaik – another deed (i.e not completing or prolonging beyond what is necessary)
kuRai – that is faulty
thIrndArin – those that have left that
thIrndanRu – will not be left
ulagu – by this world

Yet another confuing commentart by commentators including ParimElazhagar! Without convoluted interpretation, this verse can be understood. The word arrangement of this verse was probably confusing to most other commentators.

The world will not wash its hands off of the people that do not do counter productive things or spoilers such as extending beyond the time required, while doing tasks undertaken. In fact the verse does not say what it wants to convey directly. It is circuitous in its coveying style.

“Who do not indulge in spoilers, for a deed to go bad
 Or extend beyond time, are not let down by the world”


இன்றெனது குறள்

செய்யும் செயல்கெடச் செய்குறை செய்யாரை
செய்யாது நீங்கிச் செகம்

seyyum seyalkeDach seikuRai seyyArai
seyyAdu nIngich segam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...