29th Dec 2013
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.
(குறள் 613: ஆள்வினையுடைமை அதிகாரம்)
தாளாண்மை என்னும் - விடாமுயற்சி
என்னும்
தகைமைக்கண் - உயரிய பண்பு உள்ளவரிடம்
தங்கிற்றே - மட்டுமே இருக்கும்
வேளாண்மை என்னுஞ் - பிறர்க்கு உதவுதல் என்னும்படியான
செருக்கு - மேன்மை
இக்குறள் மூலமாக விடாமுயற்சியின்
பெருமையும் மேன்மையும் மீண்டும் உணர்த்தப்படுகிறது. விடாமுயற்சி என்கின்ற உயரிய பண்பு
எவரிடம் உள்ளதோ, அவரிடமே பிறர்க்கு உதவுக்கூடிய மேன்மையும் பொருந்தியிருக்கும் என்பதே
இக்குறள் சொல்லுங் கருத்து. விடாமுயற்சியே
ஆக்கத்தினை அளிக்கும் வல்லமை கொண்டது. ஆக்கம் கொண்டவர்க்கே அடுத்தார்க்கு உதவுவது சாத்தியமாகும்,
என்பதினால் வேளாண்மைக்குத் தாளாண்மை அவசியமாகிறது.
அடுத்து வரக்கூடிய குறளிலேயே
விடாமுயற்சி இல்லாதவனது பிறர்குதவும் எண்ணமும், பயந்த கோழையிடம் அகப்பட்ட வாள்போல,
வீணானது என்கிறார் வள்ளுவர் (தாளாண்மை இல்லாதான் வேளாண்மை). சம்பந்தரும் ஆக்கூர் தாந்தோன்றி மாடத்தேவாரத்தில்,
“ வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்கும் தாளாளர்” என்பர்.
Transliteration:
thALANmai ennum thagamaikkaN thangiRRE
vELANmai ennum cherukku
thALANmai ennum – people of persistent effort
thagamaikkaN – which is an elevated trait in a person
thangiRRE – will only have
vELANmai ennum – the thought to help others and the
resulting
cherukku – noble pride
Through this verse,
vaLLuvar hints at the greatness and the pride of persistent effort. Those that
have the greate trait of persistent, relentless effort will have the noble
pride to help others too. Only persistent effort gives wherewithal or wealth to
help others. Hence one goes with another.
In the following
verse also he highlights using the same words “vELANmai” and “tALANmai”
to high light the greatness of persistent effort, by saying one who is trying
to help other without persistent effort and accomplish his goals, is like a
coward carrying a sword. In either case, the use is none.
“The noble pride of helping others comes
where
the great persistent effort shines”
இன்றெனது குறள்:
பிறர்குதவும் மேன்மை விடாமுயற்சி என்னும்
சிறப்புளோர்க்கே வாய்க்கின்ற பண்பு
piRarkudavum
mEnmai viDamuyaRchi ennum
siRappuLOrkkE
vAikkinRa paNbu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam