62:(Relentless/persistent effort -ஆள்வினையுடைமை)
[After the chapters on Zeal and being devoid
of slothfulness, this chapter is about relentless effort to accomplish deeds
undertaken. Just the zeal and not being slothful alone will not help to
accomplish anything. Uncompromising, persisitent effort is required to make
significant achievements. Other common interpretations done in English call it
“Manly effort” – a direct and literal translation of the Tamil word, “ANmai”; the
word “paurusham” in Sanskrit means the being a man in protecting the country. That kind of literal interpretation does not
fit the context of the chapter; This chapter is all about being persistent in
pursuits]
27th Dec 2013
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
(குறள் 611: ஆள்வினையுடைமை அதிகாரம்)
அருமை உடைத்தென்று - இது செய்வதற்கரியதாய்
உளதென்று
அசாவாமை வேண்டும் - தளராமை
வேண்டும்
பெருமை - ஏனெனில்
அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலை
முயற்சி தரும் - இடைவிடாத முயற்சியே தரும்
எச்செயலையும் செய்வதற்கு
அரியதாக உள்ளது என்று எண்ணி தளராமை வேண்டும். ஏனெனில், ஒருவரது தளராத, இடைவிடாத முயற்சியே
அவருக்கு அரிய செயலையும் செய்யும் ஆற்றலைத் தரும். இவ்வதிகாரம் விடாமுயற்சி என்பதை
விளக்குகிற ஒன்று.
நாலடியார் பாடல் ஒன்றின் வரிகள் இயைந்த கருத்தைச் சொல்கின்றன. “இசையாதெனினும் இயற்றியோர்
ஆற்றால், அசையாது நிற்பதாம் ஆண்மை". பெருங்கதையிலும்,
“முயற்சியின் முடியாக் கருமம் இல்லென” என்று விடாமுயற்சியின் சிறப்புச் சொல்லப்படுகிறது.
Transliteration:
Arumai uDaiththenRu achAvAmai vENDum
Perumai muyaRchi tharum
Arumai uDaiththenRu – thinking that something is difficult to
accomplish
achAvAmai vENDum – one must not feel weak and incapacitated
Perumai – because the ability and vigor to do that
muyaRchi tharum – will be given by relentless, persistent
effort.
Never should one
feel feable to finish the undertaken deeds, thinking it is impossible to do
them. Persistent effort will give the power and grit to accomplish, even the
most impossible deeds successfully – says this first verse in this chapter of
persistent effort.
Earlier also we
have see this though reflected through the verse, “muyaRchi thiruvinaiyAkkum”.
Perungkadhai says, there is nothing that cannot be accomplished with relentless
effort.
“Never feel feeble to do a task taken,
feeling impossible
As
persistent effort and grit will make anything possible.”
இன்றெனது குறள்
செய்ய அரிதென்று என்றும் தளரவேண்டா
மெய்முயற்சி ஆற்றல் தரும்
seyya aridenRu
enRum thaLaravENDA
meimuyaRchi
ARRal tharum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam