16th Dec 2013
உரமொருவற் குள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.
(குறள் 600: ஊக்கமுடைமை அதிகாரம்)
உரம் ஒருவர்க்கு - ஒருவர்க்கு வலிமையெனபது
உள்ள - ஊக்கமுடைமை (அஃதுள்ளதுள்ளது ஆகையினால்)
வெறுக்கை - மிக்கு இருத்தலேயாம்
அஃதில்லார் - அவ்வூக்கத்தைக் கைக்கொள்ளாதவர்
மரம் - மண்மேலிருக்கும் மரத்திற்கு
ஒப்பாக இயக்கமில்லாதார்
மக்களாதலே வேறு - மக்கள் உருவத்தில் இருப்பது ஒன்றுதான் வேற்றுமை.
இவ்வதிகாரத்தின் இறுதிக்குறளின்
ஊக்கமில்லாரை மக்கள் உருவில் இருந்தாலும் இயக்கமில்லா மரத்துக்கு ஒப்பு என்று கூறி
ஊக்கமின்மையின் இழிமையைக் கூறி நிறைவு செய்கிறார் வள்ளுவர். ஒருவருக்கு வலிமையும்,
அறிவுத் திண்மையும் அவருடைய ஊக்கமுடைமையே. அவ்வூக்கமில்லாரை இயக்கமில்லாத மரங்களுக்கு
ஒப்பாகக் கூறலாம். ஒருவத்தில் மக்களாக இருப்பதே வேற்றுமை.
ஔவை மூதுரையில் எழுதப்படிக்கத்
தெரியாதவரை (அதுவும் கூட ஊக்கமின்மையினால்தான்), இழிவாகச் சொல்லுகையில் நகைச்சுவையோடு
சொல்லுகிறார் இவ்வாறு. நல்ல என்ற சொல் கறுப்பு என்ற பொருளில் ஆளப்படுகிறது இப்பாடலிலும்,
கறுத்து, காய்ந்த மரங்கள் பயனற்ற முதிய மரங்கள். அவையாகிலும், பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து,
பலருக்குப் பயனாகி, வாழ்விறுதியில் காய்ந்து கறுத்தன, அவற்றையும் விட பயனில்லாதவன்
வாசிக்கத்தெரியாதவன் என்று இழித்து, இடித்து உரைக்கிறார் ஔவையார். அப்பாடல்:
“கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் – சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நல் மரம்.”
கடந்துவந்த, பார்க்கப்போகிற
அதிகாரங்களிலெல்லாம், வள்ளுவர், எல்லோருக்குமாய வாழ்வை சுவையாக சமைத்தலுக்கான தேவையான
பொருள்களைச் சொல்லுகிறார். இவ்வியலைப் பொருட்பால் என்றதைவிட வாழ்க்கைபால், வாழ்வியல் என்றே கூறியிருக்கலாம்.
Transliteration:
uramoruvaR kuLLa veRukkaiah dillAr
marammakka LAdalE vERu
uramoruvaRk(u) – being resolute and wise
uLLa – is zeal
veRukkai – in excess
ahdillAr – those that don’t have it
maram – are like trees (without movement)
makkaLAdalE vERu – the only difference is they look like
people
In this last verse of the chapter, vaLLuvar,
likens unenergetic to trees in the guise of people to impactfully convey the
utter uselessness of people that are apathetic. The true strength for a person
is his strength and wisdom; without the zeal they are not possible.
Auvayyar in his work “mUdurai” calls
illiterate as worse than the dying trees of the forest. At least those trees
have had their usefuleness during their lifetime.
Being energetic and showing perpetual zeal in
life is the biggest blessing for anyone is the gist of what is conveyed in this
chapter. Through several verses in all the chapters bygone and ensuing,
vaLLuvar repeatedlty gives the ingredients for a good recipe of life. Though
the verses appear under politics and means of living canto, he could have
simply called the entire canto as “the Canto on Life” (vAzhviyal)
“For everyone, zeal is strength and wisdom;
without, they’re wood, called
people, seldom
இன்றெனது குறள்(கள்):
உண்மைவலி ஊக்கமாம் யாவர்க்கும் - மக்களல்லர்
மண்மேல் மரம்போலற் றோர்
uNmaivali
UkkamAm yAvarkkum – makkaLallar
maNmEl
marampOlaR ROr
யார்க்கும் அறிவுவலி ஊக்கமேயாம் - அற்றோர்கள்
பார்க்கமக்கள் ஆயின் மரம்
yArkkum
aRivuvali UkkamEyAm – ARROrgaL
pArkkamakkaL
Ayin maram.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam