15th Dec 2013
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெருஉம் புலிதாக் குறின்.
(குறள் 599: ஊக்கமுடைமை அதிகாரம்)
பரியது - உருவத்தால் பெரியது, வலிமிக்கதும்
கூர்ங்கோட்டது - கூரிய கொம்புகளை (தந்தங்களை) கொண்டது யானை
ஆயினும் யானை - இருப்பினும்
(ஊக்கமில்லாமையால்)
வெருஉம் - அஞ்சும்
புலி - புலியினால்
தாக்குறின் - தாக்கப்படுமாயின்.
யானைக்கு தன் வலிமை தெரியாது
என்பார்கள். யானை, புலியைப் போலல்லாமல், ஒரு மரக்கறி மிருகம்; தன் உணவுக்காக பிற மிருகங்களைக்
கொல்வதில்லை. அதைக்கொண்டு அதற்கு தன் வலிமை தெரியாது என்றும், ஊக்கமில்லை என்றும் கூறப்படுகிறது.
அதற்கு புலியை விட பெரிய உடம்பும், வலிமையும், குத்திக் கிழிக்கும் கூரிய தந்தங்களும்
இருந்தாலும், உள்ளத்து ஊக்கமின்மையினால், புலியைக் கண்டு அது அஞ்சும் என்கிறது இக்குறள்.
இக்குறள் உண்மையைத்தான் சொல்லுகிறது என்றாலும்,
பிறவியால் பிறவுயிர்கொன்று புசிக்கும் புலிக்கு ஊக்கமுள்ளதாயும், அவ்வாறு செய்யாத யானைக்கு
ஊக்கமில்லாததாயும் சொல்வது, ஊக்கமுடைமையை வலியுறுத்த தவறான ஒப்புமையைச் சொன்னதாகும்.
அரசியல் களங்களில் கொள்ளையடித்தும், கொலை செய்தும் பிழைக்கும் அரசியல்வாதிகளுக்கு
ஏதோ ஊக்கம் இருப்பது போலவும், அது இல்லாத குடிமக்களுக்கு அது இல்லாதது போலவும் ஆகிவிடும்.
எடுத்துக்காட்டுகளிலே கூட தவறான ஒப்புமைகளைச் சொல்லக்கூடாது. அவ்விதத்திலே இக்குறள்
பொருந்தாவொன்றே!
குறள் கருத்தை ஒட்டியே ஒரு குறளும்,
அதன் உள்ளுரைப் பொருளில் உடன்படாமையின், மற்றொரு குறளும் எழுதப்பட்டது. குறள் கருத்து
ஊக்கமின்மைக்கும் உருவுக்கும் தொடர்பில்லை என்பதையும், உருவு கண்டு எள்ளாமை வேண்டும்
என்பதை அடிக்கருத்தாகவும் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
Translitertation:
pariyadu
kUrngkOTTadu Ayinum yAnai
verUum
pulithAk kuRin.
pariyadu – Bigger in size and in strength
kUrngkOTTadu – Shapr tusks
Ayinum yAnai – Even if it has such superiority, an
elephant
verUum – will fear
puli- by tiger
thAkkuRin – if attacked
It is generally said that an elephant does know its strength. Unlike a
tiger, elephant is a vegetarian animal. It does not kill other animals for its
food; and because of that it is said that it does not have zeal or effort on
its own or does not know its strength.
This verse says, though an elephant has a bigger physique, strength, and
sharper tusks to kill anybody, still it will fear a tiger and the implied
meaning is because of its lack of zeal.
Though it remains the truth, the comparison is wrongly placed. A tiger is
an animal that kills for its food and an elephant does not. To stress a
thought, a wrong comparison must never be employed, which is what has been done
in this verse. It is impossible to accept vaLLuvar’s comparison.
In political stage, people that swindle or kill for their political gains
are not to be construed people have great zeal and commoners, may be big in
strength and size are inferior because they don’t act against such politicians.
Two alternate verses, one to reflect the thought as it is and another one
to say in more general terms have been written today.
“Physical stature and sharp implements are of no
use without zeal
As they can fail
before people of small frame but resolute like steal”
இன்றெனது குறள்:
பெருவுருவும் கூர்கொம்பும் பெற்றாலும் ஆனை
ஒருபுலி தாக்கவஞ் சும்
peruvuruvum kUrkombum peRRalum Anai
orupuli thAkkavan chum
வலியுரு பெற்றாலும் ஊக்கமிலார் உள்ளார்
எலியெனினும் அஞ்சிசா கும்
valiyuru peRRalum UkkamilAr uLLAr
eliyeninum anjisA gum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam