61: (Devoid of Sloth or inaction - மடியின்மை)
[It is important to have vigor, zeal; it is
even more important to be devoid of laziness and being a sloth. Zeal to do
things may be there in many, but when it comes to action sometimes, we see the
sloppiness and inaction due to laziness or being lethargic. Hence vaLLuvar
talks about not being a sloth right after the chapter on vigor or zeal.
Interest and zeal to accomplish are good, but those alone will not give
results; only pursuing the undertaken deeds without being sluggish sloppiness will
achieve results.]
17th Dec 2013
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.
(குறள் 601: மடியின்மை அதிகாரம்)
குடியென்னும் - ஒருவர் தாம்
பிறந்த குடியென்னும்
குன்றா - அணையாத,
வாடாத
விளக்கம் - சோதி விளக்கு
மடியென்னும் - சோம்பலென்னும்
மாசு ஊர - தூசு
மேலே படியப் படிய
மாய்ந்து கெடும் - இறந்து அணையும்.
ஒருவரின் குடிப்பெருமையாகிய
அணையா விளக்கானது, சோம்பலுடைமை என்னும் மாசு படியப் படிய அணைந்து இருள் சூழ்ந்து விடும்
என்று பிறந்த குடும்பத்தின் பெருமையை முன்னிறுத்தி இவ்வதிகாரத்தின் முதற்குறளாகக் கூறுகிறார்.
"மாசு ஊர" என்றதனால், சோம்பலானது பெருகப் பெருக,
சிறுகச் சிறுக பெருமை அழிந்துவிடும்.
Transliteration:
kuDiyennum kunRA
viLakkam maDiyennum
mAsUra mAindu viDum
kuDiyennum – For a person, the
pride of the family
kunRA – never fading
viLakkam – shining lamp
maDiyennum – because of lethargy,
sloth
mAs(u) Ura – that is like dust
which covers slowly but completely
mAindu viDum – will die and shut
(to bring darkness)
The
pride of family is like a lamp that should never die. The dust of lethargy,
laziness as it grows on a person slowly, but steadily, will shut the light of
pride eventually and the darkness shame will engulf, In this first verse of
being devoid of laziness, vaLLuvar puts the family in the fore to establish the
need to get rid of sloppy, sluggish and lethargic ways. The fact that shade of
dust setting in slowly on family pride is implied by the usage “mAsu Ura” in
vaLLuvar’s verse.
“The never fading light
of pride on a family will surely
shutdown as the dust of sloth, laziness
engulfs slowly”
இன்றெனது குறள்(கள்):
வாடா விளக்காம்
குடிதூசாம் சோம்பலின்றேல்
வாடா விளங்கும்
உலகு
vADa viLakkAm
kuDidUsAm sOmbalinREn
vADa viLangum
ulagu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam