12th Dec 2013
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
(குறள் 596: ஊக்கமுடைமை அதிகாரம்)
உள்ளுவதெல்லாம் - நினப்பும், எண்ணமும்
உயர்வுள்ளல் - உயர்ந்த குறிக்கோளைக் கொண்டே இருக்கட்டும்
மற்றது - மற்று அது
தள்ளினுந் - அது நிறைவேறாமல் போனாலும்
தள்ளாமை - குறிக்கோளைப் புறந்தள்ளாமல்
நீர்த்து - அவ்வெண்ணத்தை நீர்த்துப்போகச்
செய்யாமல்
“எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும்வரை நில்லாது
உழைமின்” என்று கடந்த நூற்றைம்பது
ஆண்டுகளுக்குள்ளாக வாழ்ந்து மறைந்த வீரமிக்க துறவியாம் விவேகானந்தர் மொழிந்ததை
வள்ளுவர் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு சொன்ன குறள்தான் இது. எண்ணும் எண்ணங்களெல்லாம்
ஒருவருக்கு உயர்வான குறிக்கோளைக் கொண்டவையாக இருக்கவேண்டும். அவை நிறைவேறாமல் போனாலும் கூட
நம்பிக்கையை நீர்க்கச் செய்து இழக்காமல், குறிக்கோளைப் புறந்தள்ளாமையும் வேண்டும்.
எண்ணம் சீரியதாக இருப்பின் இயக்கமும் சீரியதாகும்.
ஊக்கத்தைத் தள்ளாமை நன்று என்னாமல், அது நீர்த்துப் போகாமல், உறுதியோடு இருக்கவேண்டியதை
அடித்துச் சொல்லுகிறார் வள்ளுவர்.
பராசக்தியை வேண்டும் பாரதியும், “எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம்
வேண்டும் ;
தெளிந்தநல் லறிவு வேண்டும்” என்றல்லவோ வேண்டுகிறார்? திண்ணிய
நெஞ்சம் வேண்டுமென்று உறுதியை வேண்டுகிறார். மனவுறுதியை இவ்வாறும் வேண்டுகிறார். “மனதிலுறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் ;
கனவு மெய்பட வேண்டும்,
கைவசமாவது
விரைவில் வேண்டும்” இப்பாடலும், உள்ளுவது உயர்வாயிருத்தலையும், அதற்கான உறுதியின்
தேவையையும் ஒருங்கே தெளிவாகச் சொல்லுகிறது.
Transliteration:
uLLuvadellAm uyarvuLLal maRRadu
thaLLinum thaLLAmai nIrththu
uLLuvadellAm – A person must always think
uyarvuLLal – higher goals and higher purpose
maRRadu – Even if that
thaLLinum – does not go as wished, planned, executed
thaLLAmai – never give up (the enthusiasm or zeal)
nIrththu – letting it go dilute.
The saint that lived among us just
within the past 150 years, Swami Vivekananda said, “Arise, Awake and stop not
till the goal is reached”. This verse of vaLLuvar said the same 2000 years
back. The first part is very important. It is important to pursue higher,
elevated, exalted goals that are purposeful for the humanity. Obstacles will
come your way; yet never give up and let your goals be diluted – is what is
said and implied in this verse.
The verse must not be construed to be true for lesser or selfish
goals. The word “Nirthu” has been aptly
used to imply “not diluting”, instead of saying “it is good”. Resolve in not letting a goal with higher purpose, dilute is highly
important when marching towards the same.
Bharatiyar has said this in his poem very beautifully. “Must complet what
is envisaged, but the thoughts behind must be good; Resoulte heart is needed to
do that and a intellect is needed for the same; He has explicitly said about
not being driven by either heart or intellect. It must be a concerted
functioning of both. In another song “manadhiluRudi vEnDum” he says, “Resolute
mind is needed; Speaking with sweet words is needed; Thoughts must be good; Dreams
should materialize; that must happen in god speed”. All of them say the
same. Thought must be puposefully exalted and must never dilute even if they
are not happening as wished.
“Let all that you aim be purposefully exalted
Never
dilute goals, even if stuck and mired”
இன்றெனது குறள்:
எண்ணலெல்லாம் ஏற்றமிக்க எண்ணுக ஏலாதும்
நண்ணற்க நம்பிக்கை நைந்து
(ஏலுதல் - இயலுதல்,
ஏலாமை - இயலாமை; நண்ணற்க - குலையாதீர்; நைந்து
- தளர்ந்து)
eNNamellAm ERRamikka eNNuga eLAdum
naNNaRka nanbikkai naindu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam