டிசம்பர் 12, 2013

குறளின் குரல் - 604

13th Dec 2013

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.
                            (குறள் 597: ஊக்கமுடைமை அதிகாரம்)

சிதைவிடத்து - தம்மை அழிக்கின்ற துன்பம் வந்தாலும்
ஒல்கார் - தளரார்
உரவோர் - நெஞ்சுரம் மிக்க ஊக்கமுடையோர் (எவ்வாறெனின்)
புதை அம்பிற் - தம்மை புதைக்கக்கூடிய மூங்கில்கொண்டு மறைக்கப்பட்ட குழியில்
பட்டுப் - தாம் பிடிபட்டும், அடிபட்டும்
பாடு - அதனால் உறும் துன்பத்தையும் பொறுத்துக்கொண்டு, தளராமல்
ஊன்றுங் - தன் கால்களை ஊன்றி நிற்கும்
களிறு - ஆண்யானையைப் போல்

ஆனைகளைப் பிடிப்போர் காடுகளின் புதைகுழிகளை கட்டி, அவற்றில் விழும்படியாக அவற்றை விரட்டி விழச்செய்வர். அவ்வாற் வீழ்ந்தபோதும், அவ்வானை நெஞ்சில் உரத்தோடு, தளராமல், தம் வலிய கால்களை ஊன்றி மேலெழுந்து வர முயற்சி செய்யும். உரமிக்க நெஞ்சுடையவர்களும் அவ்வாறே தம்மை வீழ்த்துகிற துன்பமே வந்தாலும், அதனால் தளர்ந்துவிடாமல், ஊக்கத்தை கைவிடமாட்டார்.

இக்குறளில் “புதை அம்பிற்” என்று வருவதை, ஆனையை புதைக்குமளவு அம்புகளால் துளைக்கப்படுவது என்று பல உரையாசிரியர்கள் பொருள் செய்திருக்கிறார்கள். “அம்பு” என்று ஒருமையில் வருவதால் அவ்வாறு பொருள் கொள்வது பொருத்தமில்லை.  அம்பு என்பது மூங்கில்களையும், புதை என்பது ஆனையைப் புதைக்குமளவு வெட்டப்பட்ட பிடிகுழியையுமே குறிக்கவேண்டும். அவ்வாறு மூங்கில்களைக் கொண்டு மறைக்கப்பட்ட புதைகுழியிலே அகப்பட்டுக்கொண்ட ஆனை தன் கால்களை ஊன்றி நின்று மேலே வரப்பார்க்கும். இதை இங்கு உவமையாகக் கூறி, அதைப்போலே தம்மை தந்திரத்தினாலே சிக்கவைக்கும் அளவுக்கு துன்பங்கள் வந்தபோதும் ஊக்கமிக்கு தளராமை வேண்டுமென்கிறார்.

இன்றும் இரண்டு மாற்றுக்குறள்கள் ஒன்று பொதுவாக மற்றவர்கள் உரையை ஒட்டி; மற்றொன்று இங்கு செய்திருக்கிற உரையை ஒட்டி!

Transliteration:
Sidaividaththu olgAr uravOr puthaiyambiR
paTTuppA DUnRung kaLiRu

Sidaividaththu – Even if the danger that destroys comes their way
olgAr – wont lose mental strength
uravOr – resolute people
puthaiy – that which traps
ambiR – bamboo camouflage (concealment)
paTTup - trapped
pAD(U ) – the pain of being trapped
UnRung – despite that making effort to come out of the trap
kaLiRu – the male elephant

Those that capture elephants in forests make a trap of camouflage made out of bamboo stalks. With the help of an elephant trained for this, they would entice the male elephant to walk over the trap, unsuspecting, to make it fall into that trap. Even when caught, it would try and climb to escape out of the trap. Such resolve is what is seen in people of relentless pursuit;  Even in the adverse of situations they would be resolute and not give up.

The interpretation of “pudai ambiR” has been interpreted as “buried with arrows”. Since the word, “AmbiR” expresses “singularity”, it does not naturally interpret that way. If we have to construe that the arrow that can lay elephant to rest, then it would not make sense for an elephant to get up and be valorous to escape as it is already dead by then. Hence it makes sense to interpret this as a “trap” which implies cunning of the people that trap. Even when cunning forces that entrap are at work, resolute will not lose their heart and fight back to gain their rightful positions.

Like the entrapped elephant shows determination to escape
Resolute will never give up to come out of troubing landscape”


இன்றெனது குறள்(கள்):

அம்படித்தும் நின்றுகாக்கும் ஆனைபோல் ஊக்கமிக்கோர்
தம்முரத்தில் தாழார் தளர்ந்து

ambaDiththum ninRukAkkum AnaipOl UkkamikkOr
thammuraththil thAzhAr thaLarndu

புதைகுழிக்கண் பட்டுமானை ஊன்றுவது போன்றோர்
சிதைத்தாலும் தாழார் தளர்ந்து

puthaikuzhikkaN paTTumAnai UnRuvadu pOnROr
sithaiththAlum thAzAr thaLarndu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...