டிசம்பர் 10, 2013

குறளின் குரல் - 602

11th Dec 2013

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
                            (குறள் 595: ஊக்கமுடைமை அதிகாரம்)

வெள்ளத்தனைய - நீர் நிலையின் நீர்மட்டத்தின் உயரத்தின் அளவுக்கு
மலர்நீட்டம் - நீர் மலர்களான ஆம்பல், அல்லி, தாமரை போன்றவை உயர்ந்திருப்பதும்
மாந்தர்தம் - மக்களுடைய
உள்ளத்தனையது - ஊக்கத்தின் அளவே (ஊக்கம், உள்ளத்தைச் சார்ந்தது; எனவே உள்ளம் ஊக்கத்துக்கு ஆகிவந்தது)
உயர்வு - அவர்கள் வாழ்வில் உயர்வு பெறுதலும்

நீர் நிலையில், நீரின் மட்டம் எதுவோ, அந்த அளவுக்கே நீர் மலர்களான ஆம்பல், அல்லி, தாமரை போன்றவற்றின் தாள் அல்லது தண்டின் நீளமும் இருக்கும். நீரின் மட்டம் உயர, தண்டின் உயரமும் உயர்ந்திருக்கும்.  அதைப்போன்றே மக்களின் உள்ளதுள்ள ஊக்கத்தின் அளவுக்கே அவர்தம் உயர்வும், வளர்ச்சியும் இருக்கும். ஔவை மூதுரையில் நுண்ணறிவு கற்ற நூல்களின் அளவே இருக்கும் என்பதற்கு இதைப்போன்ற ஒரு எடுத்துக்காட்டைச் சொல்லுகிறார் -  “நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு”. இவ்வரிகளும் இக்குறளின் கருத்தை ஒட்டியிருப்பதைக் காணவும்.

Transliteration:
veLLath thanaiya malarnITTam mAndartham
uLLath thanaiyadu uyarvu

veLLaththanaiya – Depending on the level of water in a water containment
malarnITTam – the growth of stems of water borne flowers
mAndartham – Likewise, for people
uLLaththanaiyadu – depending on the extent of their zeal
uyarvu – their growth

Depedning the level of water in a waterbody is the growth of the stemp of water-borne flowers. As the water level rises, the stem of such flowers will also grow. Likewise, the growth of anybody is dependent on how much zeal a person has. A similar poem is written in AuvayyArs work of “mUdurai” (wise-saying) to imply how a persons’ knowledge is based on how much he reads (“nIraLavE AgumAm nIrAmbal thAn kaRRa nUlaLavE AgumAm nuNNaRivu”) Here also, AuvayyAr takes the example is water-born flowers growth as a comparison.

“As the water rises will be waterborne flowers stems rise
 Extent of a persons growth depends on his zeal likewise”


இன்றெனது குறள்:

நீர்மட்டம் நின்றளவு நீராம்பல் நீள்வதுபோல்
சீர்பெறலும் உள்ளத் தளவு

nIrmaTTam ninRaLavu nIrAmbal nILvadupOl
sIrpeRalum uLLath thaLavu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...