டிசம்பர் 09, 2013

குறளின் குரல் - 601

10th Dec 2013

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.
                            (குறள் 594: ஊக்கமுடைமை அதிகாரம்)

ஆக்கம் - செல்வம், வளம்
அதர் - வழி
வினாய்ச் - கேட்டுக்கொண்டு
செல்லும் - சென்று அடையும்
அசைவிலா - உறுதிப்பாடு குலையாத
ஊக்கமுடையான் - ஊக்கத்தினை உடையவர்
உழை - இடத்தில்

ஊக்கத்தில் உறுதிப்பாடு குலையாமல், இருப்பவனிடத்தில் செல்வமானது, அவனிருக்கும் இடத்தின் வழியைக் கேட்டுக்கொண்டு செல்லும் என்பது இக்குறள் சொல்லும் கருத்து. அடுத்து வரும் அதிகாரத்திலுள்ள ஒரு குறள், ஊக்கத்துக்கு எதிர்மறையான சொல்லைக்கொண்டு, ஊக்கத்தின் பெருமையை உணர்த்துகிறது. அதாவது சோம்பலில்லாத மன்னவர், தன்னடியினாலே உலகு முழுதும் அளந்து பெற்றதை எல்லாம் ஒருங்கே பெறுவார் என்று. அக்குறளானது: “மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு”. மற்றொரு அதிகாரத்தில் வரும் குறள் வரியொன்று, “மடியிலான் தாளுளாள் தாமரையினாள்” என்று சோம்பலில்லாதவன் காலடியில் திருமகளும் காத்திருப்பாள் என்கிறது.

Transliteration:
Akkam adarvinAi sellum asaivilA
Ukka muDaiyA nuzhai

Akkam - wealth
Adar – way, path
vinAi – will inquire (the way to reach)
sellum – and reach  and dwell a person
asaivilA – who has a steady
UkkamuDaiyAn – enthusiastic zeal
Uzhai- in his place

This verse says, wealth will reach someone who has steady mind, full of enegetic zeal. Next chapter uses an opposite word, “laziness” to convey the same. A person without laziness will get all that Lord Vishnu measured with his feet. This verse and the reference in another verse about the goddess who is holding the lotus (the goddess and consort of Vishu) indicate that the stories of Vishnu were known to old Tamil country by his time. Another verse in a different chapter also says, using the same word laziness. The Goddess will serve at the feet of one who is without laziness, in a figurative way.

“The wealth will inquire its way to dwell
 With people of steady enthusiastic zeal “


இன்றெனது குறள்:

ஊக்கத் துறுதிகொண்டார்க் காக்கம் அவர்வழி
நோக்கி விழைவ தியல்பு

Ukkath thuRudikoNDArk kAkkam avarvazhi
nOkki vizhaiva diyalbu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...