4th Nov 2013
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.
(குறள் 558: கொடுங்கோன்மை அதிகாரம்)
இன்மையின் - பொருளில்லாத ஏழ்மையைவிட
இன்னாது - துன்பமிக்கது
உடைமை - செல்வம் உடைத்தல்
முறைசெய்யா - நீதிமுறை செய்யாத
மன்னவன் கோற் - ஆள்வோனின் கோல் ஆணைக்கு
(செங்கோல் என்னாமல் கோல் என்றார்)
கீழ்ப்படின் - கீழ் வாழும் மக்களுக்கு
கொடுங்கோலாரின் ஆட்சியிலே செல்வம்
இல்லாரைவிட உள்ளார்க்கே மிகுந்த துன்பம் என்பதே இக்குறள் சொல்வது. மன்னருக்கு ஆட்சிக்குறிய
சின்னங்களாக அரிமாஇருக்கை, கையிலே நீதி ஆணைக்காக ஏந்திய கோல், வெண்கொற்றக் குடை இவையுண்டு;
நீதி நெறி தவறாதவர்க்கே அவர் ஏந்திய கோல் செங்கோல் எனப்படும். கொடுங்கோல் மன்னராயினும்,
அவர் மன்னர் என்பதால், வெறும் “கோல்” என்பார் வள்ளுவர்.
இல்லாரிடம் எடுத்துக்கொள்ள ஏதுமில்லாததால்,
அவர்களுக்கு மேலும் வருந்துன்பம் ஒன்றுமில்லை. ஆனால் செல்வம் உள்ளார்க்கு, எப்போது
அரசன் அவற்றை எடுத்துக்கொள்ளுவானோ என்ற பயமும், அதனால் துன்பமும் இருந்துகொண்டே இருக்கும்.
Transliteration:
Inmayin
innAdhu uDaimai muRaiseyyA
Mannavan
kORkizhp paDin
Inmayin – More than being poor
innAdhu – miserable and painful is
uDaimai – being wealthy
muRaiseyyA – (under) Despotic, tyrranic
Mannavan kOR – ruler’s scepter’s
kizhppaDin -
under such rule.
Under tyrraic kings’ rule, it
is more painful being wealthy than being poor. It is given that poor are
already exploited and are used to the hostile rule. For wealthy, it is truly
miserable and painful as they would not know, when the ruler would come take
away what they have.
The symbols of a ruler are the
throne, and the scepter signifying the responsibilities of the ruler to render
a just rule. The usage of word “kOl” in
this verse without qualifying it implies that vaLLuvar does not want to
disrespect the position and at the same time does not want to attribute “just
rule” to such a ruler.
“Having wealth is more miserable than being poor
Under the
scepter of a despotic ruler for sure”
இன்றெனது குறள்(கள்):
கோணுங்கோல் ஆட்சியிலே இல்லாரின் உள்ளார்க்கே
காணுமிக்க துன்பங்கள் உண்டு
kONungkOl
ATchiyilE illArin uLLArkkE
kANumikka
thunbangaL uNDu
ஏழ்மையின் செல்வமே துன்பம் கொடுங்கோலன்
பாழ்செய்யும் ஆட்சி யிலே
Ezhmaiyin selvamE thunbam koDungkOlan
pAzhseyyum Atchi yilE
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam