5th Nov 2013
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
(குறள் 559: கொடுங்கோன்மை அதிகாரம்)
முறைகோடி - நீதிமுறை தவறி
மன்னவன் - அரசன்
செய்யின் - ஆட்சி செய்வானாயின்
உறைகோடி - பருவமுறை தவறி
ஒல்லாது - செய்ய இயலாது
வானம் பெயல் - வானம் பருவமழை பொழிதலை
“வேதம் ஓதும் வேதியற்கொரு மழை, நீதி வழுவா செங்கோலுக்கொரு
மழை, பத்தினிப் பெண்களுக்கொரு மழை” என்று மாதம் மும்மாரி பொழிவதற்கான காரணங்களைச் சொன்ன அறிஞர்கள், நீதிவழுவாத செங்கோலை,
நடுவிலே வைத்தனர். அச்செங்கோன்மைத் தவறி கொடுங்கோன்மையாகும்போது, பருவங்கள் தவறும்,
பருவத்தே பொழியும் மழையும் வானின்று பெய்யாதொழியும். இதுவே இக்குறளின் கருத்து. கி.வா.ஜவின்
ஆராய்ச்சிப் பதிப்பு, ஆசிரியமாலையினின்றும், திரிகடுகத்தினின்றும் இரண்டு மேற்கோள்களைக்
காட்டுகிறது.
“கொண்மூ மழைக்கால் ஊன்றா, வளவயல் விளையா கொடுங்கோல்
வேந்தன் காக்கும் நாடே”
(ஆசிரியமாலை)
“கொள்பொருள்வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும்… வல்லே
மழை அருக்கும் கோள்” (திரி: 50)
Transliteration:
muRaikODi mannavan seyyin uRaikODi
ollAdhu vAnam peyal
muRaikODi – Deviant from just rule
mannavan – the ruler
seyyin – governs his country
uRaikODi – seasons fail
ollAdhu – will not do
vAnam peyal – the rains from skies
Rains would befall
in a country three times a month if all the three following conditions were
met: if the wisemen practice their austerities; if the kings’ rule is just; and
the women of the country live chaste. Though it could be far from the reasons
why rains would fall or not, the stress of a rulers’ just rule has it center
place. When the rule is not just, the seasons will fail and hence the rains
will too. vaLLuvar seems to tie in all the good virtues such as, the just rule,
good citizens and ethical wisemen, chastity in the society, to proper
functioning of seasons and world order. Other works like AsiriyamAlai and
ThirikaDugam have expressed the same, reflecting the guiding thought of the
society for ages.
“When the rulers rule is unjust
Seasons
fail to give rains burst”
இன்றெனது குறள்:
வான்முறை கோணும்
பருவத்தே பெய்யாமல்
கோன்முறை கோணிச்
செயின்
vAnmuRai kONum
paruvaththE seyyAmal
kOnmuRai
kONich seyin
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam