6th Nov 2013
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
(குறள் 560: கொடுங்கோன்மை அதிகாரம்)
ஆ
- ஆவினம் (பசுக்கள்)
பயன்குன்றும் - தங்கள் பயனாகிய பால்வளம் குன்றி மலட்டுப் பசுக்களாகிவிடும்
அறுதொழிலோர் - ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல்,
ஏற்றலாகிய ஆறினையும் செய்பவர்கள் (மறைநூல் வல்லார்)
நூல்மறப்பர் - தாம் நூல்களால் பெற்ற அறிவினை இழப்பர்
காவலன் - நாட்டைக் காக்கும் பொறுப்பில்
உள்ள வேந்தர்கள்
காவான் எனின் - காக்காவிட்டால்
குடிக்களைப் புரக்காது
புறக்கணிக்கும் வேந்தர்களும், ஆளுபவர்களும் செங்கோன்மைத் தவறியவர்கள்தான், ஆனால் அவர்கள்
கொடுங்கோன்மையானவர்களா? இக்குறள் இவ்வதிகாரத்தின் வருவது சரிதானா என்ற கேள்வி எழாமல்
இல்லை.
அறுதொழிலார் என்பது அந்தணர்களைக்
குறிப்பது என்பது பரிமேலழகர் கூறுவது. இது இலக்கியங்களில் பரவலாக அந்தணரின் ஆறு தொழில்களாக
விதிக்கப்பட்டவற்றை வைத்துச் சொல்லப்பட்டது. அவையாவன அறிவு நூல்களை (வேதம்) கற்பதும்,
கற்பிப்பதும் (2), வேள்விகளைச் செய்வதும் (தீவளர்த்தல்) வேள்விகளைப் பிறருக்காகச் செய்வித்தலும்
(2) மற்றும், பிறருக்கு ஈதலும், தங்கள் அன்றாடத்தேவைகளுக்கு இரத்தலும்(2) ஆகியவைதான்.
நூல்வல்லோர் என்பது பொதுவாக சான்றோர்களை, சமூகத்தில் கல்வி வல்லார்களையும் குறிக்கும்
ஆள்வோர் தம்தொழிலாகிய
குடிபுரத்தலை துறந்தால், மறந்தால், செய்யாதொழிந்தால் அந்நாட்டின் அறவழிகாட்டும் கல்வியாளர்கள்
வாடுவர், தம் ஆறுகடன்களைச் செய்யாதொழிவர். அந்நாட்டின் ஆவினக்களும் தங்களது பால்வளம்
குன்றிடும். பால்வளம் என்பது ஒருநாட்டின் ஒட்டுமொத்த வளப்பத்துக்கும் அடையாளக் குறி. கடந்த குறளும் இக்குறளும் உணர்த்துவது, வேந்தன்
அவன் கடமையைச் செய்யாமல் போனால், நாட்டில் முறையாக, பருவம் தவறாமல் நடக்கவேண்டியன நடவாமையும்,
ஒழுங்கினைக் தருவன இயங்காமல் போவதையும்தான்.
முறை தவறி நடப்பதே கொடுங்கோல் என்பதானால், இக்குறள் இவ்வதிகாரத்தின் கீழ் பொருந்தும்.
Transliteration:
Apayan kuNRum aRuthozhilOr nUlmaRappar
kAvalan kAvAn enin
A - Cows
payan kuNRum – will diminish in their gift of milk to the
world
aRuthozhilOr – learned that are responsible for 6
vocations
nUlmaRappar – will forget to practice their vocation ( so order
of society will cease to be)
kAvalan – if the ruler that is supposed to protect
kAvAn enin – won’t do his duty of protecting
If the ruler,
without protecting his subjects, ignores them , then he must be construed as an
unjust ruler; but to tag them as despotic is a bit excess. This brings a
question if this verse truly belongs in this chapter.
Parimelazhagar
interprets “aRuthozhilOr” as Brahmins, which was probably inferential from
other works as well as the prevalent thought. The designated chores of a
Brahmin (it is better to call “Learned”_) are to learn, teach, doing austerities,
helping others do austerities, to go and seeks alms to for sustenance and also
be charitable to those who don’t have.
To be politically
sensitive with times, it is better to call them as “wisemen”. If the rulers
either ignore their duty of protecting, or forget or simply does not want to
do, then the learned of his country will suffer and lose the motivation to be
the thinking head and standard bearing icon of the society; will ignore their
duties too. This will permeate through the society to citizens and will reflect
in every aspect of daily lives. Their cows will not be cared for and hence the
milk production, a measure of prosperity will diminish and perish eventually.
The verse implies a systemic disfunction of the society
Cows will fail to yield and wisemen will
ignore their duties designated
If the ruler fails in his ordained duty of
protecting subjects and ignored”
இன்றெனது குறள்:
நூலோர் நுணங்கும் அருகும்பால் ஆவினமும்
கோலோன் புரக்கா விடில்
nUlOr nuNangum
arugumpAl Avinamum
kOlOn prakkA
viDil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam