2nd Nov 2013
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.
(குறள் 556: கொடுங்கோன்மை அதிகாரம்)
மன்னர்க்கு - அரசர்களுக்கு, ஆள்வோர்களுக்கு
மன்னுதல் - நிலைபெற்ற புகழைத் தருவது
செங்கோன்மை - நீதிவழுவா ஆட்சி
அஃதின்றேல் - ஆட்சி அவ்வாறில்லையாயின்
மன்னாவாம் - நிலைபெறாதாம்
மன்னர்க்கு - அரசர்களுக்குப்
ஒளி - புகழ்
ஆளுவோர்க்கு, அவர்களது
புகழ் உலகில் நிலைபெறுதல், அவர்களது செங்கோல் வளையாது செய்யும் ஆட்சியை வைத்துத்தான்.
அவ்வாறில்லாது கொடுங்கோன்மையுடன் விளங்குமானால், அவர்களது புகழ் நிலைபெறாது.
மீண்டும் ஒரு அத்தியாய
நிரப்பியான குறள். தெரிந்த கருத்தையே இவ்வதிகாரத்திலும் சொல்லுகிறார். செங்கோன்மை என்று
சொல்லி பின்னர் அஃதின்றேல் என்றதால், கொடுங்கோன்மையைப் பற்றிச் சொல்வதாகக் கொள்ளவேண்டும்.
Transliteration:
Mannarkku mannudal senkOnmai ahdindREl
mannAvAm mannark koLi
Mannarkku – For the king or ruler
mannudal – what makes their glory stay permanent
senkOnmai – their just rule (rule by scepter)
ahdindREl – when just rule is not there or despotic rule is
there
mannAvAm – wont be permanent
mannarkk(u) – for the rulers (what?)
oLi – the glory
For rulers, their
glory stays in this world beyond their days etched in the pages of history,
when they give a just rule, a rule by scepter. When the rule is not just and
the ruler is despotic, there is no glory that will be permanent for the ruler.
The glory that seems to be there during their power is shallow, transient and
obtained through wielding oppressive power.
This is yet another
verse to fill the chapter to speak about an already known fact. Though there is
no direct mention of despotic rule or ruler, the mention of rule by scepter
followed by a clause of “if it is not rule by scepter” imply the despotic rule.
“The stability of the rule is assured by the scepter
that is just
For
despotic rule, glory is not permanent and goes to dust”
இன்றெனது குறள்:
செங்கோன்மை இல்லார்க்கு தங்காப் புகழதனால்
துங்கமன்னர் தங்குமதில் நின்று
senkOnmai illArkku thangAp pugazhadanAl
thungamannar thangumadil niRu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam