10th Oct 2013
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்
தெப்பானூ லோர்க்குந் துணிவு.
(குறள் 533: பொச்சாவாமை அதிகாரம்)
Transliteration:
pochchAppArk killai pugazhmai yadhuvulagath
theppAnU lOrkkum thuNivu
pochchAppArk killai – people of the sloppiness from forgetfulness
pugazhmai – don’t get glory
adhu- that truth
vulagath(thu) – in this world
eppA(l) – in whatever sphere of knowledge
nUlOrkkum – for learned of whichever scriptures
thuNivu – is known clear truth.
Those
who have the sluggishness of forgetfulness, there will never be glory. This is
a commonly known truth to any learned of any sphere of knowledge. This verse is
reinforcement of the same thought stream of previous verse, which said
forgetfulness kills the glory for anyone.
Parimelazhagar,
exemplifies this by saying that forgetfulness results in lack of glory, not
only learned in scriptures of virtue and value, but in any sphere of knowledge.
He further says, not only for kings, even for those who attempt in all four
areas of knowledge (Dharma, Artha, Kama and Moksha), glory will never be
reached if soaked in forgetfulness. ThirukkuraL used to be called “muppAl”
meaning a work of three disciplines of knowledge, not including the Moksha,
which is the final destination and the result for those who have accomplished
in the other three. It is not clear as to why he says “four” instead of three, as
there is no really any fourth discipline, except that it is the destination
known as salvation.
“Learned in any
discipline of knowledge knows the truth
There is no glory for people of forgeterfulness
and sloth”
தமிழிலே:
பொச்சாப்பார்க்(கு) இல்லை - மறந்து
போகும் சோர்வுடையோர்க்கு இல்லை
புகழ்மை - புகழ் உடைமை
அது - அவ்வுண்மை
உலகத்(து) - உலகத்தில் உள்ள
எப்பால் - எத்துறையைச் சார்ந்த
நூலோர்க்கும் - நூல்களையும்
கற்றவர்க்கும்
துணிவு - தெரிந்த உண்மை
மறதியென்னும் சோர்வு
உடையோர்ர்கு புகழெய்தல் என்பது இல்லை. இவ்வுண்மை, எத்துறையில் கற்று சிறந்தோருக்கும்
தெரிந்த பொது உண்மை. சென்ற குறளின் கருத்தை மீண்டும் எத்துறையில் கற்று தேர்ந்தோரும்
அறிந்த உண்மையென்று சொல்லும் குறளிது.
பரிமேலழகர், பொச்சாப்பால்
புகழின்மை, நீதிநூல் உடையார்க்கே அன்றி உலகத்து எவ்வகைப்பட்ட நூல் உடையார்க்கும் ஒப்ப
முடிந்தது என்பார். பரிமேலழகர் மேலும் கூறுவது கேள்விக்குறியது. “அரசர்க்கே அன்றி அறம்
முதலிய நான்கினும் முயல்வார் யாவர்க்கும் அவை கைகூடாமையின் புகழ் இல்லை என்பது தோன்ற
எப்பால் நூலோர்க்கும் துணிவு என்றார்” என்று கூறுகிறார் பரிமேலழகர். திருக்குறளுக்கு
முன்பிருந்த பெயர் “முப்பால்” என்பதாம்; அறம், பொருள், இன்பம் என்பவையே முப்பால் ஆகும்.
வீடு என்பது ஒரு துறையே அல்ல.. முப்பாலிலும் நின்றொழுகினார்க்குக் கிடைக்கும் பேறு
வீடு. இவ்வாறிருக்க, இவர் நான்கினும் என்று ஏன் கூறுகிறார் என்பது தெளிவாக இல்லை.
கார்நாற்பதில் ஒரு அழகான
உவமை கையாளப்படுகிறது. “பொச்சப் பிலாத புகழ் வேள்வித்
தீப்போல
எச்சாரு மின்னு மழை” என்னும் வரிகள், ஓங்கி வளர்ந்த வேள்வித்தீ வளர்ந்து எத்திக்கிலும்
மறதியின்மையினால் வரும் புகழ்போல, பரவி நன்மையைப்போல், எத்திக்குளோர்க்கும் பெய்யும்
மழை” என்கின்றன.
இன்றெனது குறள்:
எப்பால்நூல் கற்றோர்க்கும்
சோர்வு புகழழிக்கும்
தப்பாமல் என்ப தெளிவு
eppAlnUl
kaRROrkkum sOrvu pugazhazhikkum
thappAmal enba
theLivu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam