9th Oct 2013
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
(குறள் 532: பொச்சாவாமை அதிகாரம்)
Transliteration:
pochchAppuk kollum pugazhai aRivinai
nichcha nirappukkon RAngu
pochchAppuk – the weariness of forgetfulness
kollum – will destroy
pugazhai – the due glory
aRivinai – like wisdom will be, (to be read along with
konRAngu)
nichcha – perpetually lingering
nirappu – hunger and poverty
konRAngu - killed
Youth is
the time for leanring. Poverty is utterly terrible and dreadful. Even worse
than that is to be poor as a youth, auvayyAr says so. Losing the time to learn
due to poverty is utterly devastating to anyone. They are denied education and
the opportunity to gain wisdom.
Valluvar
in the chapter of “aRivuDamai” (having wisdom) says that wisdom is the tool to
get rid of misery. No enemy can destroy wisdom. (“aRivu aRRam kAkkum karuvi; seruvArkkum uLLazhikkal AgA araN). If poverty is misery then wisdom must protect
us. But th,is is true only for those who have gained wisdom and hence imply
there were not poverty striken when they were young. If someone could not even
get educated due to poverty, then it would be nothing but the curse of death.
Using
this similie, vaLLuvar says, likewise, the laxity of forgetfulness will destroy
the glory for anyone. This also implies that the glory obtained earlier is what
would be destroyed with sloppiness setting in.
“Quest for wisdom is killed by perpetual
poverty
Such
is the plight of glory, destroyed by laxity.”
தமிழிலே:
பொச்சாப்புக் - மறதி என்னும்
சோர்வு
கொல்லும் - கொன்று குலைக்கும்
புகழை - ஒருவருடைய புகழை
அறிவினை - ஒருவருடைய அறிவினை
நிச்ச - எப்பொழுது இருந்து வாட்டுகின்ற
நிரப்புக் -வறுமை
கொன்றாங்கு - கொல்வதுபோல
இளமைப் பருவம்
கல்வி கற்கும் பருவம். “கொடிது கொடிது வறுமை
கொடிது; அதனினும் கொடிது இளமையில் வறுமை” என்றார் ஔவையார். இளமையில் என்றும் வறுமையிலே வாடியவர்க்கு
அறிவென்னும் செல்வம் வாய்க்காது, அழிந்துபடும்.
வள்ளுவரே அறிவுடமை
அதிகாரத்தில் அறிவு என்பது நம்மை துன்பத்திலிருந்து காக்கும் கருவி; எந்தவொரு பகையும்
அதை அழிக்கமுடியாது என்பதை, “அறிவு அற்றம்
காக்கும் கருவி; செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண்” என்னும் குறள் வாயிலாகச்
சொல்லியிருக்கிறார் என்பதை முன்பே கண்டிருக்கிறோம். வறுமை என்பது துன்பமாயின் அறிவு
நம்மை காக்கவேண்டும். இது கற்றபின் வறுமைக்கு
என்றால் சரியாயிருக்கும். வறுமையினால் கல்வியே கற்க முடியாதவருக்கு அறிவைக் கொடாத கூற்றாகத்தான்
வறுமையிருக்கும்.
அதை உவமையாகக்
கூறி, அதேபோல, மறதி என்னும் சோர்வும் ஒருவருக்கு அவருக்குண்டான புகழை அழித்துவிடும்
என்கிறார். இதனால், ஒருவர் உழைப்பினால் அடைந்த புகழும்கூட அழிந்துபடும் மறதி வரின்
என்பதை உணர்த்தும் குறளிது.
இன்றெனது குறள்:
என்றுமுள்ள ஏழ்மை அறிவழிக்கும் போல்புகழை
கொன்றிடும் சோர்வாம்
மறப்பு
enRumuLLa
Ezhmai aRivazhikkum pOlpugazhai
konRiDum
sOrvAm maRappu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam