54: (avoding laxity or
sloppiness - பொச்சாவாமை)
[This chapter talks about not being negligent and forgetful
about self-defense, quelling enemies etc. The fault of such laxity or
sloppiness, the ill-effects of such behavior and the goodness comes out of not
having laxity or forgetfulness, and the ways of not having laxity are the main
themes of this chapter. ]
8th Oct 2013
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
(குறள் 531: பொச்சாவாமை அதிகாரம்)
Transliteration:
iRanda veguLiyun thIdE siRanda
uvagai magizhchiyiR sOrvu
iRanda – beyond measure as in (aLavu
iRanda)
veguLiyun – the anger
thIdE – is harmful
siRanda – the best
uvagai magizhchiyiR – due to happiness causing happenings
sOrvu – laxity or forgetfulness (about enemies, duties, self-defense etc.)
The happiness out
of excellence in anything and the forgetfulness resulting in negligence or
sloppiness it begets is exteremly detrimental to anyone, more importantly to
the people in power. This, vaLLuvar says in comparison to excessive anger. At
least anger against enemies or people scheming against is justified, even to
the extent of destroying them. But if
the excessive happiness can cause one to ignore or forget such threats, would
there be a worse threat?
Laxity born out of excessive happiness is
more harmful
Compared to even excessive anger, considered dreadful”
தமிழிலே:
இறந்த - அளவு மிகுந்த
வெகுளியின் - சினத்தயும்விட
தீதே - தீமை தருவது
சிறந்த - உயர்வான
உவகை மகிழ்ச்சியிற் - உவகைதரும்
களிப்பினால்
சோர்வு - வரும் மறதி அல்லது பொருட்படுத்தாமை
(பகை, கடமை, சுயபாதுகாப்பு போன்றன)
உயர்வானதாகக் கருதப்படும் உவகையும் அதனால் வரும் களிப்பும் அவை தருகின்ற மறதியும்,
அதனால் வரக்கூடிய பொருட்படுத்தாத தன்மையும் மிகவும் தீமையை விளவிக்கக்கூடியன. எவற்றைவிட
என்பதற்கு வள்ளுவர் கூறுவது, “அளவில்லாமல் வரும் சினத்தைவிட” என்பதாம். சினம் தீமையே
தருவதாயினும், பகைவரிடத்தும், எதிராகத் திரளும் வஞ்சகரிடமும் கொள்ளுதல் தவறில்லை, அச்சினத்தினால்
அவர்களை அழிப்பது, தவறில்லை. ஆனால் உயர்வானதென்றாலும், மிகுத்துவரும ஆனந்தக்களிப்பினால்,
ஒருவர் தனக்கு எதிராக இருக்கும் பகையும், வஞ்சகரும் உண்டு என்பதை மறந்து வாளா இருப்பின்
அதைவிட தீமை பயப்பது எது?
இன்றெனது குறள்:
தீராச் சினத்தினும் தீதே வருமறதி
பாரா மகிழ்வாயி னும்
thIrA sinaththinum thIdE varumaRadi
pArA magizhvAyi num
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam