7th Oct 2013
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.
(குறள் 530: சுற்றந்தழால் அதிகாரம்)
Transliteration:
Uzhaipirindhu kAraNaththin vandhAnai vEndhan
Izhaiththirundu eNNik koLal
Uzhai - the middle note in an octave is called “uzhai” in Tamil (madyam
meaning middle) also known for gloomy rainy day implying leaving during the
gloomy days for the kings
pirindhu – left
(probably with a reason for that )
kAraNaththin – again due to a reason that situations
leading to previous reasons have changed
vandhAnai – one that has come back
vEndhan – a king
Izhaiththirundu – should take care that the reason for which
the kindred left is dealt with appropriately
eNNik koLal – with due diligence, and keep them back as kindred
(if desirable)
Uzhai is the middle note in an octave in Tamil. So the word is probably
used to mean “in the middle”. Also it means a rainy and gloomy day. We can
interpret the word “uzhai” as either one
of them.
During the gloomy days of a king, (because opponents are successful) people
that left him or left the king in the middle of everything, are likely to
switch sides again, when the situation reverts back to shiny days for the king.
Regardless of how it is, the person left must have done so for a reason that
takes care of self interest. When such persons once again switches their
loyaties and are back, a king should do due diligience to take care of the
reasons for which his kindred had left him in the first place; and make sure
that the person does not leave for the same reason.
In the days, where switching loyalties in the political and business
context is very common, this kural hints what the people of power that also
need associates, kith and kin to support then,
should watch out for.
“That who left switching loyalties, when
express desire to be back
A king
must address the reason and reasses before admit the pack”
தமிழிலே:
உழைப் - சுரத்தில் மத்தியமம் (நடு சுரம்), கார்காலம் (நடுவிலே அல்லது
துன்பம் வந்த காலத்து)
பிரிந்து - விட்டுப் பிரிந்து சென்று
காரணத்தின் - பிறகு ஏதோ ஒரு காரணம் பற்றி
வந்தானை - மீண்டும் தன்னிடம் வந்தவனை
வேந்தன் - ஒரு அரசனானவன்
இழைத்திருந்து - நன்கு அக்காரணத்திற்கான செயல் செய்து
எண்ணிக் கொளல் - ஆராய்ந்து மீண்டும் தம்மோடு உறவில் கொள்ளல் வேண்டும்
உழை என்பது ஏழு சுரங்களில் மத்திய சுரத்தைக் குறிப்பது. அதாவது நடுவிலே இருப்பது.இச்சொல்
கார்காலத்தையும் குறிக்கும். ஒரு வேந்தனுக்கு கார்காலம் போல முடங்கிய காலத்தில் அவனை
விட்டுப் பிரிந்து சென்றவர் என்று பொருள் கொள்ளலாம். அல்லது, நடுவிலேயே தன் சுற்றமாகிய
வேந்தனைப் பிரிந்து சென்றவர் என்றும் பொருள் கொள்ளலாம். எப்படியாயினும், அவர் ஒரு காரணம்
பற்றியே (தன்னுடைய சுய தேவை நிறைவுக்காக) அவ்வாறு செய்திருக்கக் கூடும். அக்காரணத்தை
ஆராய்ந்து, அதற்காக ஆவன செய்து, அக்காரணம் பற்றி அவர் மீண்டும் விலகாதிருக்கும் படிசெய்து,
பிறகும் அவரின் கட்சி மாறா இயல்பை ஆராய்ந்தே,
அவரைத் தம்முறவில் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது இக்குறள்.
இக்காலத்திய கட்சிமாறிகளை உறவென்று கொள்ளும் தலைவர்களும், பணம் ஒன்றையே குறியாக
வைத்து, வேலையிடங்களை மாற்றிக்கொண்டே இருக்கு உருள் கல்லான பணியாளர்களை மீண்டும் வேலக்கு
அமர்த்த விழையும் மேலாளர்களும், செய்யவேண்டியதென்ன
என்பதை உணர்த்துகிற குறளிது.
இன்றெனது குறள்:
உறவொடித்து ஓடி உவந்துவரின் உள்க
உறவதனின் உள்நோக்கம் உற்று
uRavoDiththu Odi uvandhuvarin uLga
uRavadani
uLnoKKam uRRu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam