6th Oct 2013
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.
(குறள் 529: சுற்றந்தழால் அதிகாரம்)
Transliteration:
tamarAgi thaRRuRandAr suRRam amarAmaik
kAraNam inRi varum
tamarAgi – Being close to self
thaRRuRandAr – then leaving cutting of the connection
completely
suRRam - such kindred
amarAmaik kAraNam – the
reason for separation
inRi - when it is not there
varum – will come back to be close
What does this
verse try to talk about? Is it about the nature of the kindred or one should
not mind too much about the kindred leaving for no or any reason or everything
is as predestined…? Since it is part of this chapter of embracing kindred, we
may think it talks about the nature of kindred and we don’t have to be unduly
worried about that. Also since the close ones leave it may leave one to do
introspection to understand if there was anything on his or part to have caused
it and do remedial course of action.
The verse says:
Those kindred that left because of a reason or even no reason, will come back
when the reason for leaving does not anymore hold good.
“Close kindred that left for whatever reason,
even no reason
Will
be back when it is not there and it is a reuniting season”
தமிழிலே:
தமராகிக் - தமக்கு மிகவும் நெருக்கமாய் இருந்து
தற்றுறந்தார் - பிறகு தம்மை விட்டு ஏதோ ஒரு காரணம் பற்றி நீங்கிய
சுற்றம் - சுற்றத்தார்
அமராமைக் காரணம் - நீங்கிய காரணம்
இன்றி - நீர்த்துப்போக
வரும் - தாமாகவே சூழ்ந்து
வருவர் மீண்டும்.
இக்குறள் சுற்றத்தின் இயல்பைக் கூறுவதா, இல்லையெனில் தம்மைச்
சுற்றிய சுற்றம் நீங்கியதற்க்ஆ வருந்தக் கூடாது என்பதை வலியுறுத்துகிறதா அல்லது, எல்லாமே
விதியின் விளையாட்டு என்கிறதா? சுற்றம்தழால் அதிகாரத்தில் இருப்பதால், சுற்றத்தின்
இயல்பைக் கூறி, அதை ஒருவர் பெரிதாகக் கொள்ளவேண்டாம் என்று அறிவுறுத்துவதாகக் கொள்ளலாம்.
அன்றியும், குற்றம் கண்டு சுற்றம் நீங்குவதால், அக்குற்றத்தை அச்சுற்றம் நீங்கியகாலை
ஆய்ந்து களைந்து கொள்ளவும் முடியும் என்பதை குறிப்புணர்த்துவதாகவும் கொள்ளலாம்,
குறளின் கருத்து இதுவே: தம்மை விட்டு ஏதோ ஒரு காரணம் பற்றி நீங்கிச்சென்ற
சுற்றம் அக்காரணம் பொய்த்த வேளையில், பொருந்த வேளையில், நீங்கிய வேளயில் தாமாக மீண்டும்
வந்து சூழ்ந்து கொள்ளும்.
இன்றெனது குறள்:
உறவறுத்து சென்றசுற்றம் கூடிவரும்
தானாய்
உறவறுந்த காரணம்நீங் கின்
uRavaRuththu
senRasuRRam ODivarum tAnAi
uRavaRunda
kAraNamnIn gin
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam