5th Oct 2013
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
(குறள் 528: சுற்றந்தழால் அதிகாரம்)
Transliteration:
podunOkkAn vEndan varisaiyA nOkkin
adhunOkki vAzhvAr palar
podu – As all kindred as the same
nOkkAn – won’t look at them just like that
vEndan - a ruler (should look at)
varisaiyA - the
qualitfications, and erudition of the persons
nOkkin – when the ruler looks at them (based on merits)
adhunOkki – looking at such an excellent attribute in the
ruler
vAzhvAr – live understanding that this ruler knows how to
take care people of different caliber,
palar – will surround him to live entrusting their lives.
Though
a ruler is expected to look at everyone as the same, still while treating
people the ruler must keep in mind the merits of every person and accord them
appropriate status. Such a ruler will indeed be viewed by kindred, as
respectable and trust worthy. In this verse, an attribute required of a ruler
is said.
When the ruler does not treat all alike, but
based on merits of each one,
Such a trait of His is viewed as an
excellence, by kindred and seek none.
தமிழிலே:
பொது - தன்னைச் சூழ்ந்திருக்கும் சுற்றத்தார் எல்லோரையும் ஒன்றெனக்
கருதும்
நோக்கான் - கண்ணோட்டம் கொள்ளான்
வேந்தன் - ஆளுவோன்
வரிசையா - அவரவர் தகுதிகளை (கல்வி, கேள்வி)
நோக்கின் - கருதிப் பார்பானாயின்.
அதுநோக்கி - அந்நலனின் சிறப்புடைய
ஆள்வோனைப் பார்த்தே
வாழ்வார் - இவ்வாள்வோன் தகுதியறிந்து
புரக்கின்றவன் என்றறிந்து வாழும்
பலர் - அவனைச் சூழ்ந்த சுற்றமும்.
சமநோக்குடனே
எல்லோரையும் காணவேண்டும் என்பது ஆளுவோருக்கு விதிக்கப்பட்டதாயினும், இன்னாரின் கல்வி
கேள்வி தகுதி இதுவென்று அறிந்து, அவரவர்க்கு வேண்டிய செய்யும் ஆள்வோனையே, அவனைச் சார்ந்திருக்கும்
சுற்றமும் பார்த்து, அவனில் நம்பிக்கைக் கொண்டு வாழும். இதுவே இக்குறள் சொல்லும் கருத்து.
இப்பாட்டால் சுற்றம் சூழ இருப்பானுக்கும் மற்றொரு தேவையான குணநலமும் உணர்த்தபட்டது.
இன்றெனது குறள்:
சுற்றத்தை தத்தம் தகுதியாற்
காணுதலே
சுற்றமும் போற்றும் செயல்
suRRaththai thaththam thakudiyAr kANudhalE
suRRamum pORRum seyal
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam