11th Oct 2013
அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.
(குறள் 534: பொச்சாவாமை அதிகாரம்)
Transliteration:
Accha muDaiyArk karaNillai Angillai
pochchAp puDaiyArkku nangu
AcchamuDaiyArkk(u) – those who are fearful of everything
araNillai – no fortification is of any use
Angillai – Similarly, there is no use of, (what)
pochchAppuDaiyArkku – for those have forgetfulness
nangu – the wealth they have.
This verse has a
simple comparison of two scenarios and says, in which situation what is not
useful to whom! Even the strongest fortification does not feel safe enough for
the most fearful and cowardly person; likewise the forgetful person has no use
for the wealth he has. In both cases, they will lose what they have, because
none better than have can help them.
Even the heaviest fortification is of no use
to a cowardly and fearful;
Likewise there is no use of wealth to those
that are sloppy, forgetful”
தமிழிலே:
அச்சமுடையார்க்(கு) - நெஞ்சில்
பயத்தை சுமந்தவர்க்கு
அரணில்லை - எவ்வளவு வலிய பாதுகாப்பு
இருந்தாலும், அது அரணாக ஆகாது
ஆங்கில்லை - அதேபோல எப்பயனும் இல்லை
பொச்சாப்புடையார்க்கு - மறதியுடையார்க்கு
நன்கு - செல்வத்தால்
எளிய கருத்தைச் சொல்லும் குறள். இரண்டு வேறு காட்சிகளை ஒப்பு நோக்கி,எக்காட்சியில்,
எது சரியில்லை என்பதைக் கூறுகிறது. மிகவும் கடுங்காவல்களை உடைய கோட்டையே கொண்டிருந்தாலும்
,அவை பயங்கொண்ட வேந்தர்க்கு அரணாக இருந்து பாதுகாக்காது. அவர்கள் பேடிமையினால், அவர்கள்
அழிந்துவிடுவார்கள். அதேபோன்று எவ்வளவு செல்வமிருந்தாலும் அதனால் ஒரு பயனும் இல்லை,
மறதியுள்ளவர்களாக இருந்தால்; இரண்டுமே இருந்தும் இல்லாமைதான், இழக்கப்படுபவைதான்.
இன்றெனது குறள்:
செல்வத்தால் எப்பயனும் இல்லைமறந் தார்க்கதுபோல்
இல்லையஞ்சு வோர்க்கொருகாப் பும்
selvaththAl eppayanum illamaRan dArkkadupOl
illaiyanju vOrkkorukAp pum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam