24th Aug 2013
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
(குறள் 486: காலமறிதல் அதிகாரம்)
Transliteration:
Ukka
muDaiyAn oDukkam poruthagar
thAkkaRkup
pErun thagaithu
UkkamuDaiyAn – One who is capable and enthusiastic to accomplish
oDukkam – and his patience and wait for the ripe time is like
poru
thagar – the fighting sheep
thAkkaRkup – to fight with its opponent
pErun
thagaithu – is like taking a step backward (before charging
forward)
This verse gives a metaphor to explain how very
capable people, will appear as if contained, but only to consider the ripe time
to raise up against odds to get their deeds completed successfully. The metaphor used is how a fighting sheep
would back track before it charges ahead against its enemy. Though it may
appear it is conceding, it is waiting for the right time to charge ahead. Such
is the nature of capable people of intellect.
The intent is to emphasize that the intellect is not
in showing that the person is capable, but in keep composed until the time of
action and not let the opponent guess what the person is capable of.
Men
that are capable of accomplishment tend to wait for the time to be right;
To
charge ahead, just as a fighting sheep back tracks before showing might
தமிழிலே:
ஊக்கமுடையான் - செயலாற்றல் மிக்கவன்
ஒடுக்கம் - அடங்கியிருப்பது (தக்க காலத்தை எதிர்நோக்கி)
பொரு தகர் - சண்டையிடும் ஆடு
தாக்கற்குப் - தனக்கு எதிராகப் பொருது
ஆட்டோடு சண்டையிடும் முன்
பேருந் தகைத்து - தன் கால்களை பின்னோக்கிச்
செல்வது போல் வைப்பதைப் போலாகும்
இக்குறள் ஒரு உவமையைச் சொல்லி செயலாற்றலுடன் ஊக்கம் மிக்கவர்கள் ஒடுங்கியிருப்பது பின்பு வேகத்துடன்
எழுந்து காலமறிந்து செயலாற்றத்தான் என்கிறது. சொல்லப்படும் உவமையானது, ஆட்டைப் மையப்படுத்தியது.
ஒரு சண்டையிடும் ஆடு, காலை பின்னோக்கி வைத்து, பின்வாங்குவதுபோல தோற்றமளித்தாலும்,
அவ்வாறு செய்வது, அது முன்னே பாய்ந்து எதிரியை வீழ்த்தத்தான். இதையே கொங்குவேளிர் தாம்
இயற்றிய பெருங்கதையில், “பாடுபெயர்ந்து இடிக்கும் மேடகம் போல
அகன்றுபெயர்ந்து அழிக்கும் அரும்பெறல்
சூழ்ச்சி” என்கிறார்.
பொதுவாக புழக்கத்தில் உள்ள மற்றொரு சொலவடை, “புலி
பதுங்குவது, பாய்வதற்காகத்தான்”. திறமையுள்ளவர்கள், திட்டமிட்டு செயலாற்றுபவர்கள் ஊக்கமிருந்தாலும்,
தகுந்த நேரத்திலேதான் செயலாற்ற முனைவர். அதற்கு முன்பாக ஒடுக்கத்துடன் அடங்கியே இருப்பர்.
காண்பவர்களுக்கு, இவர்கள் செயலாற்றப் போகிறார்கள் என்னும் எண்ணம்கூட இருக்காது.
இன்றெனது குறள்:
பின்வைக்கும் காலாடு தாக்கவேபோல் ஆற்றலோன்
தன்காலம் பார்த்திருப்பான் காத்து
pinvaikkum
kAlADu thAkkavEpol ARRalOn
thankAlam
pArththiruppAn kAththu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam