23rd Aug 2013
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
(குறள் 485: காலமறிதல் அதிகாரம்)
Transliteration:
kAlam
karudhi iruppar kalangAdhu
njAlam
karudhu bavar
kAlam – for appropriate or opportune time
karudhi
iruppar – will be looking for that (time)
kalangAdhu – with resolved and unruffled mind
njAlam - to conquer the world
karudhubavar – those who desire that (to conquer the world)
One who has set his mind to conquer the world (to
leave behind a lasting fame in this world) should act with strong and unruffled
frame of mind, at appropriate time.
Though this verse seems to stress the same theme
with similar sounding words, “kAlam”, “njAlam”, there is a subtle difference in
stressing the strong and unruffled frame of mind. In fact the last three
verses, including this one, have stressed acting on time as a common theme, but
with right tool, place and an unruffled frame of mind as the cofactors to go
with that theme. Perhaps the intent is to say one other factor that is also
important, one at a time so that the impact of what is said is not lost in a
crowd, could be vaLLuvar’s intent. Cheevak chinthAmaNi, one of the five major
KAvyAs combines the three in one verse. It asks:
“is there anything impossible for one who knows
the place, time and is unruffled, with right intellect to act?”
“One
must wait for the right time, be unruffled
If
he is desirous to conquer the whole world”
தமிழிலே:
காலம் - தகுந்த நேரத்தைக்
கருதி இருப்பர் - பார்த்திருப்பர்
கலங்காது - நெஞ்சில் உறுதியுடனும், மயக்கமில்லாமலும்
ஞாலம் - உலகத்தையே வெல்ல
கருதுபவர் - எண்ணுபவர்.
உலகையே வெல்லவேண்டும் என்று (அதாவது
உலகில் தம்பெயர் நிலைத்திருக்கும்படியான புகழை) விரும்புகிறவர், நெஞ்சில் உரமும், எதற்கும்
மயங்காத நிலையும் கொண்டவராக தக்க நேரத்தை தேர்ந்து செயலாற்றுபவராக இருக்க வேண்டும்.
இக்குறளும், காலம், ஞாலம் இவற்றைக்
கொண்டே எழுதப்பட்டாலும், கடந்த மூன்று குறள்களிலும் காலத்தோடு முறையே கருவி, களம்,
கலங்காமை இவற்றைக் கொள்வதையும் வலியுறுத்தியுள்ளது புரியும். தகுந்த காலம் என்பதோடு,
எல்லாவற்றையும் சேர்த்துச் சொல்லி, நீர்த்துப்போகச் செய்யாமல், தனித்தனியே ஒவ்வொன்றின்
பங்கையும் கூறியிருப்பது, ஒருவேளை நன்கு மனங்களில் பதியவேண்டும் என்பதற்காக இருக்கலாம்.
இம்மூன்று கருத்துக்களையும் இணைத்த பாடல் சீவக சிந்தாமணியிலிருந்து:
“இடத்தொடு பொழுதும்நாடி எவ்வினைக்கண்ணும் அஞ்சார் மடப்படலின்றிச்
சூழும் மதிவல்லார்க் கரியதுண்டோ?”
இன்றெனது குறள்:
மயங்காது
உற்றநேரம் பார்த்திருப்பர் பூமி
நயந்துசெயல்
ஆற்றுகின்ற வர்
mayangAdhu
uRRanEram pArththiruppar pUmi
nayandhuseyal ARRukinRa var
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam