20th Aug 2013
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
(குறள் 482: காலமறிதல் அதிகாரம்)
Transliteration:
paruvaththODu
oTTa ozugal thiruvinaith
thIrAmai
Arkkung kayiru
paruvaththODu – for times
oTTa
ozugal – doing deeds appropriate (for the times)
thiruvinaith – wealth (which is of not staying nature)
thIrAmai – not washing away spent
Arkkung
kayiru – that rope which binds to stay
One
must know what the demands of the times are, must adapt and act accordingly;
for the wealth, which is of non-staying nature, it is the only way to stay
bound. Knowing to act on time is the rope to success to both climb as well as
to bind. This is applicable to everyone in the society. More so for the rulers
whose timely actions mean the wealth of the nation. They set the tone for
manufacturing, for seeding for different crops for feeding needs, trade,
economic prosperity by taking appropriate course of action. Another way to
interpret this would be know the changing economic conditions of the country in
conjunction with rest of the world too. In a sense this verse suggests
appropriate timing for both the micro and macro economic activities of the
rulers.
“The binding rope to
make prosperity and wealth stay
Is to perform timely in tune with times,
wisemen say!”
தமிழிலே:
பருவத்தோடு - காலத்தோடு
ஒட்ட ஒழுகல் - பொருந்துமாற்று வினையாற்றுதல்
திருவினைத் - செல்வத்தினை (ஓடும் தன்மையது)
தீராமை - அது செலவழிந்து செல்லாது
ஆர்க்குங் கயிறு - பிணைக்கும், கட்டும் கயிறாகும்
ஒருவர் காலமறிந்து, காலத்துக்கு இயைந்தவாறு தம்முடைய செயல்களை
ஆற்றுவாராயின், அதுவே நில்லாது ஓடும் தன்மையதாகிய செல்வத்தை நிறுத்திப், பிணைத்து வைக்கும்
கயிராக இருக்கும். இது சமூகத்தில் எல்லோருக்கும் பொருந்தும். ஆளுவோருக்கு மிகவும் தேவையான
ஒன்றாகும். உற்பத்திக்கு, விளைச்சலுக்கு, வாணிபத்துக்கு என்று ஒவ்வொரு துறைக்கும் எந்தெந்த
காலங்களில் என்ன செயல்கள் பொருத்தமோ அவற்றைச் செய்தல் வேண்டும். இது மாறிவரும் வணிகம்,
மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகளென்றும் கொள்ளவேண்டும்.
இன்றெனது குறள்:
காலமறிந் தாற்றுவதே செல்வத்தைக் கட்டிவைத்து
ஞாலம் நிறுத்துகின்ற நாண்
kAlamaRin thARRuvadhE selvaththaik
kaTTivaiththu
njAlam niRuththuginRa nAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam