ஆகஸ்ட் 19, 2013

குறளின் குரல் - 488


49: (Knowing proper time - காலம் அறிதல்)

[Apart from knowing ones strength in several things like wealth, capacity to do things, go on war with enemies etc, knowing he appropriate time for anything is important for everyone, especially for the rulers. In the ensuing chapter, vaLLuvar discusses many situations where timing is important to many deeds for everyone. There is a popular tamil adage, “ParuvaththE payir sei” meaning to reap the best harvest, appropriate time must be chosen to seed the soil]

19th Aug 2013

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
                          (குறள் 481: காலமறிதல் அதிகாரம்)

Transliteration:
Pagalvellum kUgaiyaik kAkkai igalvellum
vEndharkku vENDum pozhdhu

Pagal vellum – In daytime, can win
kUgaiyaik – the owl (which one will win over owl?)
kAkkai – the crow (answer to previous question)
igal vellum – Likewise to win over the enemies
vEndharkku – for the rulers
vENDum pozhdhu – right time is needed

To win over enemies, there should be ripe time for everyone.  But how does one know or decide as to what the right time is? It is not a magical moment that happens randomly. It comes out of proper training, appropriate support, understanding the strengths and weaknesses of the enemies and time during which the enemy is weaker and devoid of support before even venturing into facing the enemy. All constellations have to be aligned to accomplish something is not said in astronomical or astrological connotation. It is to denote the appropriate timing.

Regardless of how strong somebody is, without knowing the aforementioned factors, if a ruler ventures into a duel with enemney, failure is imminent. An owl is strong during nights as it is nocturnal by nature and can win over crow during night. But during the daytime, a crow will win over an owl. Samething is true for rulers to understand what the right time is to face the enemy and fight.

“ Like a crow will win over an owl during daytime
  A king, to win enemnies, should know rightime”

பகல் வெல்லும் - பகல் நேரத்திலே வென்றுவிடும்
கூகையைக் - ஆந்தையை/கோட்டானை
காக்கை - காகமானது (ஆந்தை இரவிலே காக்கையை வெல்லும் வலிமையுடையது ஆயினும்)
இகல் வெல்லும் - பகைவரை வெல்லௌதற்கு
வேந்தர்க்கு - ஆளுவோருக்கு
வேண்டும் பொழுது - தகுந்த காலம் கனிய வேண்டும்

பகைவரை வெல்ல ஒருவருக்கு தகுந்த காலம் கனிய வேண்டும். இதை எப்படி முடிவு செய்வது? காலம் கனிவது என்பது முறையான பயிற்சி, தகுந்த துணை, பகைவர்கள் வலிமையும், துணையும் குன்றிய நேரம், இவற்றை அறிவது, இது தக்க நேரம் என்றறிந்து செயலாற்றுவது. எவ்வளவுத்தான் வலிமை மிக்கவராக இருப்பினும், பகையின் வலிமை அறிந்திருந்தாலும், தகுந்த நேரத்தினை அறிந்து செல்லவில்லையெனில், தோல்வி நிச்சயமே. நேரம் அமைவது ஒரு வானவியல், அல்லது சோதிட சாத்திரத்தில் நிகழும் ஒரு மந்திரத்தருணம் அல்ல. எல்லா கிரகங்களும் சரியான இடங்களில் இருக்கவேண்டிய ஒரு கணமும் அல்ல. திட்டமிட்டு வகுக்கப்பட்ட நேரமே அது.

ஆந்தையானது இரவில் வலிமை மிக்கது தவிரவும் பார்க்கும் வல்லமையும் உடையது. அதோடு காக்கை சண்டையிட முடியாது இரவு நேரங்களில். ஆனால் பகல் நேரங்களில் காக்கை ஆந்தையை வெகு எளிதாக வென்றுவிடும். இவ்வொப்புமையை கம்பரும், “வேந்தர், அற்காக்கை கூகையைக் கண்டஞ்சினவாம் என அகன்றார்” என்று கம்பராமாயணத்தில் பயன்படுத்தியுள்ளார்.

இன்றெனது குறள்:
வேந்தர்க்கு வேண்டும் கனிந்தநேரம் காக்கையும்
ஆந்தையை வெல்பகல் போல்

vEndharkku vENDum kanidhanEram kAkaiyum
Andhayai velpagal pOl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...